சென்னை, ஜூலை 8- தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. தொடர் மழையால் தக்காளி சாகு படி வீழ்ந்துள்ளது. தக்காளி சாகுபடி சீரடைய இன்னும் இரண்டு மூன்று வாரங்கள் ஆகலாம். இதனால் கோயம்பேடு காய்கறி சந்தைக்கு வரத்து குறைந்துள்ளதால், விலை அதிகரித்து காணப் படுகிறது. வெள்ளிக்கிழமை முதல் ரகம் தக்காளி கிலோ ஒன்றிற்கு ரூ.80 முதல் 90 வரை விற்பனை செய்யப் பட்டது. சனிக்கிழமை கிலோவுக்கு ரூ.30 வரை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித் துள்ளனர். இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் விலையும் அதிகரித்துள்ளது. ரூ.50க்கு விற்பனை செய்யப் பட்ட பச்சை மிளகாய் சனிக் கிழமை இரண்டு மடங்கு விலை உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.