திருப்பூர், அக். 21 – நாளுக்கு நாள் நெருக்கடி அதி கரிக்கும் நிலையில் தாக்குப்பிடிக்க முடியவில்லை. எனவே ஏற்றுமதி கட னுக்கான வட்டி விகிதத்தை 5 சத விகிதமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்று திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது. திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் கே.எம்.சுப்பிரமணியம், ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாரா மனுக்கு வெள்ளிக்கிழமை அனுப்பி யுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: கொரோனா பெருந்தொற்று மற்றும் ரஷ்ய – உக்ரைன் போர் காரணமாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் மக்கள் செலவிடுவதின் முன்னுரிமை மாறி விட்டது. எரிவாயு, மின்சாரம் மற்றும் உணவுப் பொருட்களுக்கு அதிகமாக செலவிட வேண்டிய நிலையில் ஆடை களை வாங்குவதைக் குறைத்துக் கொண்டனர். அத்துடன் ஆடையை பயன்படுத்தக்கூடிய காலஅளவும் மூன்று, நான்கு மடங்கு அதி கரித்துள்ளது. அமெரிக்க சந்தையிலும், பிரிட்டன் சந்தையிலும் இதேபோன்ற நிலைமைதான் உள்ளது.
இந்த சூழலில் திருப்பூர் பின்னலா டைத் தொழில் மையம், நிதி நெருக்கடி காரணமாக தாக்குப்பிடித்து நிலைத் திருப்பதற்கே கடுமையான அச்சுறுத்த லை சந்தித்து வருகிறது. குறிப்பாக ஆடை கள் கேட்டு ஒப்பந்தம் போடுவது குறைந்துவிட்டது, வெளிநாடுகளுக்கு அனுப்பிய ஏற்றுமதி ஆடைகளுக்கு உரிய பணம் வருவது தாமதம் ஆகிறது. மேலும் ஏற்கெனவே ஒப்புக் கொண்டு பதிவு செய்து தயாரிக்கப்பட்ட ஆடை களை பெற்றுக் கொள்ள மறுப்பதுடன், கப்பலில் அனுப்புவதிலும் கால தாமதம் ஏற்படுகிறது. இந்த நெருக்கடி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. திருப்பூரைப் பொறுத்தவரை மொத்த ஏற்றுமதியில் 75 சதவிகிதம் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளின் சந்தைக்குத்தான் அனுப்பப்படுகிறது. அங்கு ஏற்படும் நெருக்கடியின் தாக்கத்தை இப்போது திருப்பூரில் கண்கூடாக உணர முடிகிறது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாத ஆயத்த ஆடை ஏற்றுமதி அளவு முறையே 0.60 சதவிகிதம், 0.34 சத விகிதம் மற்றும் 18.06 சதவிகிதம் அள வுக்கு வீழ்ச்சி அடைந்திருக்கிறது. இந்த எதிர்மறை வீழ்ச்சி வரக்கூடிய மாதங்களி லும் தொடரும். உலக சந்தையில் நிச்சய மற்ற நிலை தொடர்ந்து கொண்டிருக் கிறது.
இந்த நிலையில், ஏற்றுமதி கடனுக் கான வட்டி மானியம் சிறு, குறு தொழில் களுக்கு 3 சதவிகிதமும், அவை அல்லாத பிற உற்பத்தி தொழில்களுக்கு 2 சதவிகிதமும் 2024ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வரை வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. இந்த திட்டம் கடந்த 2021 அக்டோபர் 1ஆம் தேதி முதல் முன்தேதியிட்டு அமல்படுத்தப் படுகிறது. தற்போது உலக சந்தை யில் நெருக்கடியான சூழ்நிலை இருப்ப தால் ஏற்றுமதி கடனுக்கான வட்டி மானி யத்தை அனைத்து உற்பத்தி தொழில் நிறுவனங்களுக்கும் 5 சதவிகிதமாக உயர்த்தி வழங்க வேண்டும். இதன் மூலம் பல லட்சம் தொழிலாளர்கள், குறிப்பாக பெண்களின் வேலைவாய்ப்பையும், இத்தொழிலையும் பாதுகாக்க முடியும். இவ்வாறு கே.எம்.சுப்பிரமணியம் கூறியுள்ளார்.