“சுரானா” என்றால் இனிய ஒலி களை மகிழ்வுடன் எழுப்புதல் என்று பொருள். ஆனால் இராஜஸ்தான் ஜாலோர் மாவட்டம் சயலா வட்டத்தில் உள்ள “சுரானா” என்ற கிராமத்தில் இருந்து எழுந்த மரண ஓலம் துயரின் உச்சக்கட்டம். இந்தியா 75 வது சுதந்திர தின நிறைவைக் கொண்டாடியதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக ஒன்பது வயது தலித் சிறுவன் இந்தர் மெக்வாலின் கொலை நிகழ்ந்தது. “உயர்” சாதி யினர்க்கு வைத்திருந்த பானையில் இருந்து நீர் அருந்தி விட்டான் என்பதற்காக பள்ளி தலைமை ஆசிரியர் அடித்து உதைத்ததில் உயிர் போய் விட்டது என்பதே குற்றச்சாட்டு. பள்ளிக் கூடத்தின் பெயர் சரஸ்வதி வித்யா மந்திர். இக்குற்றச் சாட்டை சாதி இந்துக்கள் மறுக்கிறார்கள். “நான் அரசியல் பண்ணுகிறேன் என்கிறார்கள். எப்படி மகனின் மர ணத்தின் மீது ஒரு அப்பாவால் அரசியல் செய்ய முடியும்?” - என்று சிறுவன் இந்தரின் தந்தை தேவாரம் எழுப்புகிற கேள்வி சமூகத்தின் மனச் சாட்சியை உலுக்குகிறது. இந்தர் உடலோடு நீதி கேட்டு போராடிய போது காவல் துறை தொடுத்த தாக்குதலின் காயங்கள் அவரின் உடலில் இருக்கிறது. “என்னை இனி இக் கிராமத்தில் வேலை செய்ய விட மாட்டார்கள். எங்கள் குடும்பமே புறக்கணிப்புக்கு ஆளாகப் போகிறது.”
- இப்படிச் சொல்லும் தேவாரம், அவர் வீட்டில் இருக்க முடியாமல் ஊருக்கு வெளியே உள்ள சகோதரர் வீட்டில் தஞ்சம் புகுந்துள்ளார். இந்தரின் அம்மா பவானி தேவி தனது மகன் “பானை” விவ காரத்தால் பள்ளிக் கூடத்தில் தாக்கப்பட்ட தை நினைவு கூர்கிறார். அவன் காது களில் வலி இருப்பதை சொன்னவுடன் உள்ளூர் மருந்துக் கடையில் மருந்துகளை வாங்கி தருகிறார் அப்பா. பிறகும் வலி குறையாததால் 13 கிமீ தூரத்தில் உள்ள பகோடா என்ற கிராமத்தில் உள்ள மருத்து வமனைக்கு அழைத்துச் செல்கிறார்கள். டாக்டர்களின் சிகிச்சையால் சற்று வலி குறைகிறது. இரண்டு நாட்கள் ஆன பிறகு மீண்டும் வலி வந்து விடுகிறது. பின்மல் என்ற நகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு... செல்கிறார்கள். தற்காலிகமாக மீண்டும் வலி குறைகிறது. மீண்டும் மீண்டும் வலி... ஓடுகிறது குடும்பம்... 8 மருத்துவ மனைகள். 1200 கி.மீ தூரத்தில் உள்ள குஜராத் அகமதாபாத் மருத்துவமனையில் உயிர் பிரிகிறது. ராஜஸ்தான் மாநிலத்தில் 18 சத வீதம் பட்டியல் சாதியினர். 13 சதவீதம் பழங்குடியினர். வன்கொடுமை எண்ணிக்கையில் நான்காவது இடத்தில் உள்ள மாநிலம். 2020 இல் மட்டும் 7000 குற்றங்கள், வன்கொடுமைகள் தலித் மக்களுக்கு எதிராக...நாட்காட்டி தாள்கள் கிழியும் போது ஒவ்வொரு நாளும் 20 வன்கொடுமைகளும் சேர்ந்தே அரங்கேறு கின்றன.
மார்ச் 15, 2022 : மீசை வைத்த காரணத்திற்காக ஜிதேந்திர மெக்வால் என்கிற மருத்துவ ஊழியர் பாலி மாவட்டத்தில் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
மார்ச் 17, 2022 : தொல்பூர் மாவட்டத்தில் ஒரு தலித் பெண்மணி 6 நபர்களால் அவருடைய குழந்தைகளின் கண் முன்பாக கும்பல் பலவந்தத்திற்கு ஆளாக்கப்பட்டார்.
மே 22, 2022 : பண்டி மாவட்டத்தில் 35 வயதான தலித் ஒருவர் தனது வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என 31 மணி நேரம் பட்டினி போடப்பட்டு, மாட்டுத் தொழுவத்தில் கட்டி வைத்து அடித்து துன்புறுத்தப்பட்டுள்ளார்.
ஜூன் 9, 2022 : பால்மர் மாவட்டத்தில் 14 வயது பையன் வேலைக்கு வரவில்லைஎன்பதற்காக இரும்பு கம்பிகளால் தாக்கப்பட்டுள்ளான்.
ஆகஸ்ட் 10, 2022 : ஒரு பெண் ஆசிரியை ரெய்சார் மாவட்டத்தில் கொளுத்தி தீக்கு இரையாக்கப்பட்டுள்ளார். தலித் மணமகன் குதிரையில் அமர்ந்து சென்றால் தாக்கப்படுவது இந்த மாநிலத்தில் நாடறிந்த கொடுமை. குதிரையில் அமர்ந்து வருவது மட்டுமல்ல, செர்வானி உடுத்தினாலே உயிருக்கு ஆபத்து என்ற நிலைதான். சாதி இந்துக்கள் எங்கள் கிராமம் பாகுபாடுகள் அற்றது என்று கூறினா
லும், சுரானா கிராமமும் சாதிய பாரபட்சங்கள் உடையது என்று தலித் செயற்பாட்டா ளர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள். உள்ளூர் சலூனில் முடி வெட்ட அனுமதிக்காததால் 25 கி மீ தூரம் வட்டத் தலைநகர் போய் முடிவெட்டுவார்களாம். முடி முதல் உயிர் முடியும் வரை சாதிய வன்மம்!
எப்படி இனிய ஒலிகள் கேட்கும்!
- கே.எஸ்.
தகவல் : இந்து ஆங்கில நாளிதழ் - 26.08.2022