நியூயார்க், அக்.17- அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் தன்னிச்சையாகப் போடும் பொரு ளாதாரத் தடைகள் மனித குலத்திற்கு புற்றுநோய் போன்றது என்று மக்கள் சீனம் விமர்சனம் செய்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தைப் பாதுகாக்கும் நண்பர்கள் என்ற குழுவின் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்றுப் பேசுகையிலேயே சீனா இவ்வாறு குறிப்பிட்டுள்ளது. இது பற்றிப் பேசிய ஐக்கிய நாடுகள் சபைக்கான சீனாவின் தூதர் டாய் பிங், “உலக உணவு, எரிபொருள் மற்றும் நிதிப் பாதுகாப்பு ஆகியவற்றிற்கு ஆபத்தாக பொருளாதாரத் தடைகள் உருவாகியுள் ளன. இதனால், வளரும் நாடுகளுக்கு ஏராளமான நெருக்கடிகளை உருவாக்கும் நிலை எற்பட்டிருக்கிறது” என்றார். தன்னிச்சையாக எடுக்கப்படும் இந்த நடவடிக்கைகள் மனித குலத்திற்கு புற்று நோயை உருவாக்குவது போன்றது என்ற அவர், “அமெரிக்கா மற்றும் சில மேற்கத்திய நாடுகள் விதித்துள்ள சட்டவிரோத மற்றும் காரணமில்லாத தடைகள் உடனடியாகத் திரும்பப் பெறப்பட வேண்டும். மனித உரிமைகள் மீறல் என்ற பெயரில் போடப் படும் தடைகள்தான் உண்மையிலேயே மனித உரிமைகளை மீறுகின்றன. தன்னிச்சையான இவர்களின் தடைகளால் பல நாடுகளின் மனித உரிமைகள் பாதிக் கப்பட்டுள்ளதால், அதற்கு இவர்களைப் பொறுப்பேற்கச் செய்ய வேண்டும்” என்று குறிப்பிட்டார். வர்த்தகத் தடை, நிதி முதலீட்டைத் தடுப்பது மற்றும் சந்தையில் தலையிடுவது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை சில நாடுகள் தனிப்பட்ட முறையில் எடுக்கின் றன. இந்த நடவடிக்கைள் ஐக்கிய நாடுகள் சபையின் சாசனம் மற்றும் சர்வதேச சட்ட த்தை மீறுகின்றன என்று டாய் பிங் சுட்டிக் காட்டினார். இந்த மனிதகுல விரோதத் தடை களால் சில நாடுகள் பேரழிவைச் சந்திக்கின் றன என்பதோடு, அங்கெல்லாம் தங்களு க்குச் சாதகமான அரசுகளை நியமிக்க பல்வேறு கலகங்களைத் தூண்டி விடுகிறார்கள் என்றும் குற்றம் சாட்டினார்.