states

ஆத்தூர் காவல் ஆய்வாளர் அத்துமீறல்

சென்னை, பிப்.11- ஆத்தூர் காவல் ஆய்வாள ரின் அத்துமீறலுக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. அவர் மீது நட வடிக்கை எடுக்க வேண்டுமென டிஜிபி-க்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்  செயலாளர் சாமி. நடராஜன் விடுத்துள்ள அறிக்கை: ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில் கிராமப்புற மக்க ளின் மேம்பாட்டிற்கு ஒதுக்கப் படும் நிதி கடந்தாண்டை விட இந்தாண்டு 1 லட்சத்து 65 கோடி ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. உதாரணமாக விவசாயிகளுக் கான உர மானியம் கடந்த பட்  ஜெட்டை விட ரூ.50000 கோடி  குறைக்கப்பட்டுள்ளது. கிராமப் புற மக்களுக்கான உணவு மானி யத்திற்கான நிதி 90000 கோடி  குறைக்கப்பட்டுள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை  உறுதித்திட்டத்திற்கு இந்தாண்டு வெறும் 60 ஆயிரம் கோடி மட்  டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. பிர தம மந்திரி கிசான் திட்டத்திற் கான நிதி 8000 கோடி குறைக் கப்பட்டுள்ளது. கார்ப்பரேட் ஆதரவை தொடர்ந்து கடைப்பிடித்து கிரா மப்புற மக்களின் நலன்களை புறக்கணிக்கும் ஒன்றிய பாஜக  அரசின் பட்ஜெட்டை கண்டித்து,  நாடு முழுவதும் விவசாயிகளும் விவசாயத் தொழிலாளர்களும் திரண்டு கிராமங்கள், நகரங்கள் தோறும் பட்ஜெட் நகலை கொளுத்  தும் போராட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவ சாயத் தொழிலாளர்கள் சங்கம்  இணைந்து தமிழ்நாட்டில் பிப்ர வரி 11 அன்று நூற்றுக்கணக் கான இடங்களில் நகல் எரிப்பு போராட்டத்தை நடத்தினர். சேலம் மாவட்டத்தில் பல இடங்களில் நகல் எரிக்கும் போராட்டம் நடத்  துவதற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளதோடும், ஆத்தூரில் நடைபெற்ற நகல் எரிக்கும் போராட்  டத்திற்கு தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் மாநிலத் தலை வர் பெ.சண்முகம் தலைமை வகித்தார். போராட்டம் துவங்குவதற்கு முன்பே ஆத்தூர் காவல் ஆய்  வாளர் செந்தில்குமார் போராட்  டத்தில் கலந்து கொண்ட தலை வர்களை மிகவும் இழிவாகவும், கொச்சைப்படுத்தியும் பேசியுள்  ளார். குறிப்பாக மாநில தலை வர் தோழர்.பெ.சண்முகம் அவர்  களை ஒருமையில் பேசி, கை யை பிடித்து இழுத்துள்ளார். காவல்துறையின் இத்தகைய அத்துமீறலை தமிழ்நாடு விவ சாயிகள் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. ஒன்றிய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிரான விவசாயிகளின் போராட்  டங்களில் தமிழ்நாடு காவல் துறை பல இடங்களில் இது போன்ற நடவடிக்கைகளில் ஈடு படுவது சரியல்ல என்பதை சுட்டிக்காட்டுகிறோம். சேலம்  ஆத்தூர் காவல் ஆய்வாளர்  செந்தில்குமார் விவசாயிகளி டம் நடந்து கொண்ட அத்து மீறல் மீது தமிழக காவல் துறை  இயக்குநர் உடனடியாக விசா ரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் வலியுறுத்துகிறோம் என்று அவர் கூறியுள்ளார்.