states

ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட குடும்பத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சி தலையீட்டால் நீதி கிடைத்தது

பொன்னமராவதி, செப்.20- புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமரா வதி ஒன்றியம் தொட்டியம்பட்டி ஊராட்சியில் உள்ள கட்டையாண்டிபட்டியை சேர்ந்தவர் பழனியப்பன் (48). இவரது மனைவி செல்வி (46). இவர்களுக்கு பொன்னழகு (28), போது மணி (26), முத்துலட்சுமி (24) ஆகிய மூன்று மகள்களும் ஆனந்த் (23) என்ற ஒரு மகனும் உள்ளனர்.  இதில் 3-வது மகள் முத்துலட்சுமி, சாதி  மறுப்பு காதல் திருமணம் செய்த காரணத் தால், இவர்களது குடும்பத்தை ஒன்றரை ஆண்டுகளுக்கு ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளனர். இதுகுறித்த செய்தி தீக்கதிர் நாளிதழில் வெளியான நிலையில், சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் தலைமையில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் துரை.நாரா யணன், மாவட்ட குழு உறுப்பினர் அ.மண வாளன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட தலைவர் சலோமி, வாலிபர் சங்க மாவட்ட தலைவர் மகாதிர், ஒன்றியச் செயலா ளர் என்.பக்ருதீன் மற்றும் ஒன்றிய குழு உறுப்  பினர்கள் கள ஆய்வு மேற்கொண்டனர். அதில், கடந்த வாரம் செப்.12 ஆம் தேதி கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம். சின்னத்துரை, மாவட்டச் செயலாளர் எஸ்.கவி வர்மன் ஆகியோர் தலைமையில் ஆட்சியரை சந்தித்து பாதிக்கப்பட்ட பழனியப்பனின் குடும்பத்திற்கு நீதி வேண்டி வலியுறுத்தினர்.  ஆட்சியரின் உத்தரவின் பேரில், இலுப் பூர் வருவாய் கோட்டாட்சியர் குழந்தைசாமி தலைமையில், செப்.14 அன்று இரு தரப்பும் பங்கேற்ற சமாதானக் கூட்டம் நடைபெற்றது. இதில், பாதிக்கப்பட்ட பழனியப்பன் குடும்பத்தி னரை ஊரோடு சேர்த்துக் கொள்வது என முடி வெடுக்கப்பட்டது. சிபிஎம் தலையிட்டால் பாதிக்  கப்பட்ட பழனியப்பன் குடும்பத்தினருக்கு நீதி கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

;