states

குவைத் சிறையில் தவிக்கும் தமிழக மீனவர்கள்

இராமநாதபுரம் மாவட்டம் திருப்பா லைக்குடி, மோர்ப்பண்ணை, பாசிப்பட்டிணம் மீனவக் கிராமங்களைச் சேர்ந்த  நான்கு மீனவர்கள், குவைத்தில் கடந்த 2023ஆம் ஆண்டு மீன்பிடி ஒப்பந்தக் கூலிகளாக சென்று  மூன்று மாதங்களே  ஆன சூழலில் கடந்த 05/12/2023 அன்று வழக்கம் போல் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். அவர்களுடன் அதே படகில் இவர் களுக்கு முன்பிருந்தே  பல வருடங் களாக பணிபுரியும் அரபி ஒருவரது சதிச் செயலால், தவறு ஏதும் செய்யாமலே பொய்யான போதைப் பொருள் வழக்கில் சிக்க  வைக்கப்பட்டனர்.  சுமார் 5 மாத காலமாக விசாரணைக் கைதிகளாக இருந்தவர்களை மீட்டுத் தரக் கோரி அவர்களின் குடும்பத்தினர் சார்பாகவும் சிஐடியு இராமநாதபுரம் மாவட்டக் குழு சார்பிலும், கடல் தொழி லாளர் சங்கம்(சிஐடியு) சார்பாகவும் மாவட்ட ஆட்சியர் முதல் வெளியுறவு துறை இணை அமைச்சர் உள்பட ஒன்றிய, தமிழக அரசின் நிர்வாகங் களின் அனைத்து மட்டத்திற்கும், நேரிலும் தபால் மூலமாகவும் மனு அனுப்பப்பட்டது. 500க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டமும் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, தேர்தல் அறிவிப்புக்கு முன்பாக நடத்தப்பட்டது. மோர் பண்ணை மற்றும் திருப்பாலை க்குடி கிராமங்களைச் சேர்ந்த பொது மக்களுடன் இணைந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குள் இறங்கி இரண்டு நாள் போராட்டம் நடத்தப்பட்டது. சிஐடியு அகில இந்திய பொதுச் செய லாளர் தபன்சென் அவர்கள் வெளியுற வுத்துறை அமைச்சருக்கு கடிதமும் எழுதியுள்ளார். இத்தனை நடவடிக்கைகளையும் வெளியுறவு அமைச்சகம் அலட்சியப் படுத்தியுள்ளது.  இதன் காரணமாக, குவைத் நீதிமன்றம் கடந்த 13/05/2023 அன்று, நிரபராதிகளான நான்கு தமிழக மீனவர்களில் இருவருக்கு 15 வருடம் சிறை தண்டனையும் மற்றும் இரு மீன வர்களுக்கு 7 வருடம் சிறை தண்டனை யும் விதித்து தீர்ப்பு அளித்துள்ளது. இதில் வேதனையான விசயம் யாதெனில், இந்த வழக்கின் மீதான முதல் கட்ட விசாரணையில் கடந்த 21/02/2024 அன்று குவைத்தின் கீழமை  நீதிமன்றம், அரபி நபர் மட்டுமே கடத்த லில் ஈடுபட்டுள்ளார் என்பதை உறுதி செய்து மேற்படி நபருக்கு மட்டும் 25 ஆண்டு சிறை தண்டனை விதித்தும் தமிழக மீனவர்கள் நான்கு பேரும் நிரபராதிகள் எனவும் தீர்ப்பு வழங்கி விடுவித்துள்ளது.  தவறில் ஈடுபட்ட மேற்படி நபர் இந்த தீர்ப்பை ஆட்சேபித்து குவைத்தின் மேல்  நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். அங்கும் கூட ஏற்கனவே கீழமை நீதிமன்றம் வழங்கிய அதே  தீர்ப்பை உறுதி செய்தே தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன் பிறகு மேற்படி அரபி நபர் அதற்கும் அடுத்த மேல் நீதிமன்றத்தில் மீண்டும் மேல்முறையீடு செய்துள்ளார். அந்த வழக்கில்தான் கடந்த மே 13 அன்று மேற்கண்ட பாதகமான தீர்ப்பு  வழங்கப்பட்டுள்ளது. இந்திய வெளி யுறவுத்துறை அமைச்சகம், உடனடியாக தலையீடு செய்திருந்தால் நான்கு மீன வர்களையும் உடனடியாக மீட்டு இந்தி யாவிற்கு கொண்டு வந்திருக்க முடியும். ஒன்றிய பாஜக அரசின் அலட்சி யத்தின் காரணமாகவே நான்கு மீனவர் களும் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்க ப்பட்டு குவைத் சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட இந்திய மீனவர் களுக்கு தங்கள் தரப்பு நியாயத்தை நீதி மன்றத்தில் எடுத்துச் சொல்ல  ஒன்றிய, மாநில அரசுகள் வழக்கறிஞரை நிய மனம் செய்திருக்க வேண்டும். அரபு மொழி தெரியாததால் குவைத்தின் மூன்று நீதிமன்றங்களிலும் என்ன நடந்தது என்ற விபரம் நம் மீனவர்களுக்கும் தெரியாது. இந்திய தூத ரக அதிகாரிகளும் தலையிடத் தவறி யுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டிருப்பது நான்கு மீனவர்கள் மட்டுமல்ல; நான்கு குடும்பங்கள் என்பதை ஒன்றிய, மாநில அரசுகள் கவனத்தில் கொண்டு சிறைப் பட்டுள்ள அப்பாவி மீனவர்களை  மீட்டுத் தர உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.  தமிழக அரசும் தமிழக முதல்வர் அவர்களும் இது விசயத்தில் உரிய தலையீடு செய்வதுடன் நிரபராதிகளான ஏழை மீனவர் குடும்பங்களின் வறுமை நிலையை கணக்கில் கொண்டு; கடந்த 2011-ஆம் ஆண்டு இதே போன்ற சூழ லில் இலங்கை கடற்படையின் கைது  நடவடிக்கைக்கு  உள்ளான தங்கச்சி மடம் மீனவர்கள் 5 பேரின்  குடும்பங் களுக்கு அன்றைய தமிழக அரசு தலா  ரூ.2 லட்சம் குடும்ப பாதுகாப்பு நிதி வழ ங்கியது போல் இவர்கள் குடும்பத்திற்கு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.  காலம் கடத்தாமல் மீனவர்களை  மீட்க வழக்கறிஞர் நியமனம் செய்வது டன் இருநாட்டு அரசுகளும் தூதரக ரீதியிலான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். - எம்.சிவாஜி,  சிஐடியு மாவட்ட செயலாளர், இராமநாதபுரம்

;