states

கட்டடம் இடிந்து நால்வர் பலி

தெலுங்கானா, ஏப்.30- தெலுங்கானா மாநிலம் யாதாத்ரி-புவனகிரி மாவட்டம் யாதகிரிகுட்டாவில் உள்ள ஸ்ரீராம்நகர் காலனி பிரதான சாலையில், வெள்ளிக்கிழமை மாலை ஆறு மணியளவில் ஒரு கட்டிடத்தின்  முதல் தளத்தில் உள்ள பால்கனி இடிந்து விழுந்ததில் 4 பேர் உயிரிழந்தனர். பலியானவர்கள்  குண்டலப்பள்ளி தசரத் கவுட் (70), கட்டடத்தின் உரிமை யாளர் சுஞ்சு ஸ்ரீனிவாஸ் (40), கிராமப்புற மருத்துவ பயிற்சியாளர் சுங்கி உபேந்தர் (40), தங்கபள்ளி ஸ்ரீநாத் (45) என காவல்  துறையினர் தெரிவித்தனர். இந்த விபத்தில் பேட்டரி கடை  வைத்  திருக்கும் 40 வயது நிரம்பிய கிரி  மார்பு மற்றும் கால்களில் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த கட்டடம் 35 ஆண்டுகள் பழமை யானது. கட்டடம் இடிந்து விழுந்ததற்  கான காரணம் இன்னும் தெரியவில்லை. இந்த சம்பவம் குறித்து தகவல்  அறிந்த ஆளுநர் தமிழிசை சௌந்தர ராஜன் பலியான நான்கு பேரின் குடும்பத்தினருக்கும் இரங்கல் தெரி வித்துள்ளார்.