- பாஜக - ஆர்எஸ்எஸ் - பார்ப்பன மற்றும் அவர்களது அடி வருடிகளின் கூட்டணியானது, எதிர்ப்பு பிரச்சாரம் என்ற போர்வையில் திமுக-வுக்கு எதிராகத் திட்ட மிட்ட கோயபல்ஸ் பிரச்சாரத்தை சமூகவலை தளங்களி லும், சில பத்திரிகைகளும் தொடர்ந்து எழுதியும், பேசியும், நடத்தியும் வருகின்றன. உங்கள் (பாஜக - ஆர்எஸ்எஸ்) வித்தைகள் பெரியார் மண்ணில் எடு படாது என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
- கி.ரா என அழைக்கப்படும் எழுத்தாளர் கி.ராஜநாரா யணன் நூற்றாண்டு விழா மற்றும் நினைவு மண்டப அடிக்கல் நாட்டு விழா, அவரது சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் இடைசெவலில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அடிக்கல் நாட்டினார்.
- பிரபல சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் ரீல்ஸின் “தம்ப்நெயில்” (Thumbail) பிரிவை ஒருவரது கணக்கு மற்றும் கடவுச்சொல் இல்லாமல் யார் வேண்டுமானா லும் மாற்றலாம் என இருந்த தொழில்நுட்ப கோளா றை கண்டு பிடித்த ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்த மாணவன் நீரஜ் சர்மாவுக்கு மெட்டா நிறு வனம் ரூ.38 லட்சம் பரிசுத்தொகை வழங்கியுள்ளது.
- பஞ்சாப் முன்னாள் முதல்வர் அம்ரீந்தர் சிங் பாஜக வில் கரைந்தார். காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து தான் உருவாக்கிய பஞ்சாப் லோக் காங்கிரஸ் கட்சியையும் பாஜகவில் இணைத்தார்.
- ஜெயலலிதாவின் உயிலை வெளியிடக்கோரியும், அவரின் சமாதியில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதி கோரியும் மாங்காட்டைச் (காஞ்சி புரம்) சேர்ந்த ஓய்வுபெற்ற அரசு ஊழியரான சவுந்தர ராஜன் என்பவர் மனு தாக்கல் செய்த வழக்கில் தமிழ்நாடு டிஜிபி, ஆணையர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- அறந்தாங்கி அருகே கடந்த 2020-ஆம் ஆண்டு 9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆவணம் பெருங்குடியைச் சேர்ந்த கிறிஸ்டோபர் (22) என்ற இளைஞருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து புதுக்கோட்டை மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
- “ஜம்மு - காஷ்மீரில் மத அறிஞர்களை சிறையில் அடைத்துவிட்டு, ஜூம்மா மசூதியை மூடிவிட்டு, பள்ளிக்குழந்தைகளை இந்து மத பாடலை பாடவைப்பது இந்திய அரசின் உண்மையான இந்துத்துவ கொள்கையை வெளிப்படுத்துகிறது. இந்த வெறித்தனமான கட்டளைகளை மறுத்தால், பாது காப்புச் சட்டம் பாயும். இதுதான் ஜம்மு-காஷ்மீரின் மாற்றம் என கூறப்படுவதற்கு நாம் கொடுக்கும் விலை” என ‘ரகுபதி ராகவ ராஜாராம்’ பாடலை மாணவிகளை பாடவைத்தது தொடர்பாக ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
- ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் உறுப்பினராக துர்க்கியே விருப்பம் தெரிவித்துள்ளது. சமர்கண்டில் செப்டம்பர் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களில் ஒரு நாடாக துர்க்கியே பங்கேற்றது. இந்த மாநாட்டிற்குப் பிறகு துர்க்கியே திரும்பிய அந்நாட்டு ஜனாதிபதி ரிசெப் தய்யிப் எர்டோகன் “2023-ஆம் ஆண்டில் இந்தியாவில் நடைபெறும் உச்சி மாநாட்டில் துர்க்கியே முழு உறுப்பு நாடாவது குறித்த முடிவெடுக்கப்படும்” என்றார்.
- பாலஸ்தீனத்தின் மேற்குக் கரைப் பகுதியில் பாலஸ்தீனர்களுக்குச் சொந்தமான 44 கட்டிடங்களை இஸ்ரேல் தகர்த்து தரைமட்டமாகி விட்டதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இவற்றில் பல கட்டிடங்களுக்கு எந்தவித முன்னெச்சரிக்கையும் தரப்படவில்லை. இந்த நடவடிக்கைகள் சட்டவிரோதமானவை என்று சொல்லியிருக்கும் ஐக்கிய நாடுகள் சபை, நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறியுள்ளது.
- பிரான்சில் ஊபெர் ஈட்ஸ் என்ற வர்த்தக நிறுவனத்தில் பணியாற்றும் 2 ஆயிரத்து 500 உணவு விநியோக ஊழியர்கள் திடீரென்று வேலையில் இருந்து விலக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்களாவர். இவர்களிடம் போதிய ஆவணங்கள் இல்லாததால்தான் வேலையில் இருந்து நிறுத்தப்பட்டார்கள் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. வேலையில் இருந்து நீக்கப்பட்டவர்களில் 500க்கும் மேற்பட்டோர் பாரீசில் உள்ள நிறுவனத்தின் தலைமையகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர்.