states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

  1. செஸ் ஒலிம்பியாட் தொட ரின் 8-வது சுற்று ஆட் டத்தில் இந்திய “பி” அணி வீராங்கனை பத் மினி ராவத் குரோஷி யாவின் அனமரிஜாவை 28-வது நகர்வில் வீழ்த்தி  அபார வெற்றி பெற்றார்.
  2. தில்லியில் ஞாயிறன்று நடைபெற உள்ள நிதி ஆயோக்கின் 7-வது ஆட்சிமன்றக் குழு கூட்  டத்தில் நான் பங்கேற்க மாட்டேன் என தெலுங் கானா முதல்வர் சந்திர சேகர ராவ் பேச்சு
  3. கேரள மாநிலம் கண்ணூ ரில் துவக்கப் பள்ளி ஒன்  றில் ஆசிரியராக பணி யாற்றி வரும் கோவிந்தன் நம்பூதிரி (50), 4 மாணவி, ஒரு மாணவன் உட்பட 5 பேருக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் 79 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.2 லட்  சத்து 17 ஆயிரம் அபராத மும் விதிக்கப்பட்டுள்ளது.
  4. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக மருது அழகு ராஜிடம் 5 மணிநேரமாக நடைபெற்ற விசாரணை நிறைவு பெற்ற நிலை யில், எடப்பாடி பழனி சாமியின் நண்பரான  சேலம் இளங்கோவனை யும் விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறார் மருது அழகுராஜ்.
  5. வருங்காலத்திற்கான உடன்பாட்டில் அனைத்து நாடுகளும் கையெழுத்திடும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது குறித்துக் கருத்து தெரிவித்த அவர், “இந்த உடன்பாட்டின் பிரதான அம்சமே பன்முகத்தன்மை கொண்ட சர்வதேச அமைப்பு என்பதை மீண்டும் உறுதிப்படுத்துவதேயாகும். இன்றைய மற்றும் நாளைய சவால்களைச் சந்திக்கப் பொருத்தமான அமைப்பாகவும் அதை மாற்றியமைப்பதும் ஆகும்” என்று குறிப்பிட்டார்.
  6. ஆகஸ்டு 6, 1945 அன்று அமெரிக்காவால் ஜப்பானிய நகரமான ஹிரோசிமா மீது குண்டு வீசிய போது அதில் உயிர் பிழைத்தவர்கள் தங்கள் அனுபவங்களை அடுத்த தலைமுறைக்கு சொல்லிச் செல்ல விரும்புவதாகக் கூறியிருக்கிறார்கள். அமெரிக்காவால் வீசப்பட்ட முதல் அணுகுண்டுக்கு சுமார் 1 லட்சத்து 40 ஆயிரம் பேர் பலியானார்கள். தங்கள் குரல்கள் கேட்கப்படுவதில்லை என்று யமடா உள்ளிட்ட பலரும் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
  7. திரைப்பட பைனான்சியர் அன்புச்செழியன், அவ ருக்கு தொடர்புடைய தயாரிப்பாளர்கள், விநியோ கஸ்தர்களுக்கு சொந்தமான 40 இடங்களில் நடைபெற்ற வருமான வரி சோதனையில் ரூ.200 கோடி கைப்பற்றப்பட்டுள்ளதாக வருமான  வரித்துறை தகவல்.
  8. பட்டியலினத்தவர் குறித்து அவதூறு கருத்துக் களை பதிவிட்ட வழக்கில் நடிகை மீரா மிதுனுக்கு  2-வது முறையாக பிடி வாரண்ட் பிறப்பித்தது சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதி மன்றம்.