19-வது சீசன் ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவில் சனிக்கிழமையன்று தொடங்கு கிறது. இந்த ஆசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த இந்திய வீரர் - வீராங்கனைகளுக்கு சீனா அனு மதி மறுத்துள்ளது. சீனாவின் செயலுக்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், ஆசிய விளையாட்டுப் போட்டியின் தொடக்க விழாவுக்கு சீனா செல்லவிருந்த ஒன்றிய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூரின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு மோசடி வழக்கில் சிபிஐ தாக்கல் செய்த புதிய குற்றப்பத்திரிகை தொடர்பாக “இந்தியா” கூட்டணியில் அங்கம் வகிக்கும் ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் மூத்த தலைவர் லாலு பிரசாத், பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் மற்றும் 14 பேருக்கு எதிராக தில்லி நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்ட நோயா ளிகளின் விவரங்களைத் தெரிவிக்காத மருத்துவர்களுக்கு சட்ட விதிகளின்படி அபராதம் விதிக்கப்படும் எனவும், டெங்கு கொசு உற்பத்திக்கு காரணமானால் ரூ.500 அபராதம் எனவும் தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
“சட்டத்தை விட மேலானவர் என நினைக்கிறீர் களா?” உத்தரவை பின்பற்ற மாட்டீர்களா? என பல்வேறு கேள்விக்கணைகளை எழுப்பி ‘லைகா’ நிறு வன வழக்கில் நீதிமன்ற உத்தரவை பின்பற்றாத நடிகர் விஷால் மீது “ஏன் அவமதிப்பு வழக்கு தொட ரக்கூடாது?” என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.