40-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை
சென்னை, செப். 20- தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கீழ் எண்ணூர், வடசென்னை, தூத்துக்குடி, மேட்டூர் உள்ளிட்ட இடங்களில் அனல்மின் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த அனல்மின் நிலை யங்களில் கன்வேயர் பெல்ட் உள்பட மின் உற்பத்தி பொருட் களை சென்னையை தலை மையிடமாக 4 நிறுவனங் கள் தயார் செய்து வழங்கி வருகின்றன. இந்த நிறு வனங்கள் மின்வாரியத்துக்கு தேவையான பொருட்களை சப்ளை செய்ததில் முறைகேடு கள் நடைபெற்றிருப்பதாக வருமானவரித் துறையின ருக்கு பல்வேறு புகார்கள் வந்தன. இந்நிலையில் வியாழனன்று அதிகாலை சம்பந்தப்பட்ட 4 நிறுவனங் களுக்கு சொந்தமான 40 இடங்களில் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை யில் ஈடுபட்டனர். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சம்பந்தப்பட்ட நிறுவனங் களின் அலுவலகங்கள் மற்றும் மின்வாரியத்துக்கு பொருட்களை சப்ளை செய்யும் ஒப்பந்ததாரர்களின் அலுவலகங்கள், வீடு உள்ளிட்ட இடங்கள் மற்றும் சென்னையில் கிண்டி ஈக்காட்டுத்தாங்கல் நீலாங் கரை, நாவலூர், செங்கல்பட்டு தி.நகர், எருக்கஞ்சேரி, எம்ஜி ஆர் நகர், ஜாபர்கான் பேட்டை, துரைப்பாக்கம், பொன்னேரி மற்றும் மேட்டூர், எண்ணூர், வடசென்னை மற்றும் தூத்து க்குடி ஆகிய அனல்மின் நிலை யங்கள் என 40 இடங்களில் சோதனை நடைபெற்றது.
அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு தள்ளுபடி
சென்னை, செப்.20- சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம் செய்த வழக்கில், கடந்த ஜூன் மாதம் 14 அன்று அமலாக்கத்துறை அதிகாரி களால் கைது செய்யப்பட்டு புழல் சிறை யில் அடைக்கப்பட்டார். அவருக்கு விதிக்கப்பட்ட நீதிமன்ற காவல் கடந்த செப்.,15 அன்றுடன் முடிவடைந்த நிலையில், அதேநாளில் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி அல்லி முன்பு வீடியோ கான்பரன்சிங் வாயிலாக செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார். செந்தில்பாலாஜியின் நீதிமன்ற காவலை மேலும் 14 நாட்கள் நீட்டித்து, செப்., 29 வரை சிறையில் அடைக்க உத்தரவிட்ட நீதிபதி அல்லி ஜாமீன் மனு குறித்த தீர்ப்பு புதனன்று அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், புதனன்று தீர்ப்பில் ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை முதன்மை அமர்வு நீதிபதி அல்லி தள்ளுபடி செய்தார்.
இந்தியர்களுக்கு ஒன்றிய அரசு எச்சரிக்கை
கனடா நாட்டு குடியுரிமையுடன் அந் நாட்டில் வாழ்ந்த காலிஸ்தான் ஆத ரவு அமைப்பின் தலைவர் ஹர்தீப் சிங் நிஜார் கடந்த ஜுன் 18 அன்று சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த விவகா ரத்தில் இந்தியா மீது கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூட்டோ குற்றச்சாட்டியுள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் மோதல் போக்கு உருவாகியுள்ளது. இந்தியத் தூத ரகத்தின் அதிகாரி பவன்குமார் ராய் உட னடியாக கனடாவை விட்டு வெளியேற வேண்டும் எனவும் அந்நாட்டு அரசு உத்தர விட்டது. இதற்கு பதிலடியாக, தில்லியி லுள்ள கனடா நாட்டின் முக்கிய அதிகாரி யான ஒலிவியர் சில்வர்ஸ்டரை 5 நாட்க ளுக்குள் இந்தியாவை விட்டு வெளி யேறும்படி ஒன்றிய அரசு உத்தரவிட்ட நிலையில், கனடாவில் உள்ள இந்தியர்கள் மற்றும் இந்திய மாணவர்களுக்கு எச்ச ரிக்கையாக இருக்க வேண்டும் என ஒன்றிய அரசு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
நாகை - இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து
நாகப்பட்டினம் சிறு துறை முகத்திலிருந்து 60 கடல் மைல்கள் (111 கிமீ) தொலை வில், இலங்கையின் காங்கேசன் துறைமுகத்திற்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து சமீபத்தில் அறிவிக் கப்பட்டது. அதன்படி 150 பயணிகள் பயணிக்கும் விரைவு பயணியர் கப் பல் (High Speed Passenger Ferry) இயக்குவதற்கான பணிகள் தொடங் கப்பட்டுள்ள நிலையில், பணிகளை தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு புதனன்று ஆய்வு செய்தார். துறைமுகத்தில் அனைத்து வசதிகளும் ஏற் படுத்தப்பட்டு அக்டோபர் மாதம் முதல் வாரத்தில், தமிழ்நாடு அரசு டன் இணைந்து கப்பல் போக்கு வரத்தினைத் தொடங்க ஒன்றிய அரசு உத்தேசித்துள்ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
பங்குச் சந்தைகளில் கடும் சரிவு
மும்பை பங்குச் சந்தையில் சென் செக்ஸ் குறியீடு கடந்த சில நாட்க ளாக ஏற்றத்தை நோக்கி பய ணித்து வந்த நிலையில், புதனன்று திடீ ரென 700 புள்ளிகள் வரை சரிவடைந்து 66,900.90 புள்ளிகளாக காணப்பட்டது. புத னன்று காலை வர்த்தகம் தொடங்கிய பின் னர் மதியம் 2 மணி அளவில் திடீரென வர்த் தகம் பெருமளவில் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் குறியீட்டில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், பாரதி ஏர்டெல், மாருதி, டைட்டன் மற்றும் இந்துஸ்தான் யுனி லீவர் உள்ளிட்ட பிற பெரிய நிறுவனங்க ளின் பங்குகளும் சரிவை சந்தித்துள்ளன. அதிகப்பட்சமாக எச்டிஎப்சி வங்கி பங்கு கள் 3 சதவீதம் வரை சரிவடைந்து உள்ளது. தேசிய பங்குச் சந்தையிலும் நிப்டி குறியீடு 19,500 புள்ளிகளுக்கு கீழ் சென்றடைந்து உள்ள நிலையில், ஆசிய பங்குச் சந்தை களில் சியோல் (தென் கொரியா), டோக் கியோ (ஜப்பான்), ஷாங்காய் (சீனா) மற் றும் ஹாங்காங் உள்ளிட்ட பகுதிகளின் வர்த்தகம் சரிவடைந்து காணப்பட்டது.
‘பர்கர்’ சாப்பிட்டவருக்கு உடல்நலக்குறைவு நாமக்கல்லில் அடுத்த பரபரப்பு
நாமக்கல் பரமத்தி சாலையில் உள்ள சந்தப்பேட்டை புதூர் பழனிசாமி தெருவை சேர்ந்த வர் தவக்குமாரின் மகள் கலையரசி (14), அதே பகுதியில் உள்ள தனியார் உணவ கத்தில் “சவர்மா” உணவை சாப்பிட்டு தனி யார் மருத்துவமனையில் சிகிச்சை பல னின்றி உயிரிழந்தார். இதனால் நாமக்கல் மாவட்டம் முழுவதும் சவர்மா, பிரைடு ரைஸ், தந்தூரி போன்ற துரித உணவு வகைகளை விற்க மாவட்ட நிர்வாகம் தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், சிறுமி கலையரசி சவர்மா சாப்பிட்ட அதே உணவகத்தில் “பர்கர்” வாங்கி சாப்பிட்ட 18 வயது இளைஞருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டு நாமக்கல் அரசு மருத்து வமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப் பட்டுள்ளார். இதனால் நாமக்கல்லில் மீண் டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தலிபான் அரசாங்கத்தின் சித்ரவதை ஐ.நா.அறிக்கை
காபூல்: ஆப்கானிஸ்தானில் அரசு ஆதரவுடன் அந்நாட்டு அதிகாரிகளால் நிகழ்ந்துள்ள 1,600 க்கும் மேற்பட்ட மனித உரிமை மீறல் வழக்குகளை ஆவணப் படுத்தியுள்ளதாக 19 மாத ஆய்வறிக்கை யை சமர்ப்பித்துள்ளது ஐநாசபை. ஆய்வு மேற்கொள்ளப்பட்ட நபர்க ளில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் மனித உரிமை மீறல்கள், மனிதாபிமான மற்ற சித்ரவதை மற்றும் கொடூரமான தாக்குதலுக்கு உள்ளானதாக ஆய்வ றிக்கையில் தெரிவித்துள்ளதோடு இந்த சித்ரவதைகளை நிறுத்தவும் கைதி களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் தலிபான் அரசாங்கத்தை ஐக்கிய நாடு கள் சபை வலியுறுத்தியுள்ளது. 2022 முதல் 2023 ஜூலை வரைஆப்கானிஸ்தானின் 34 மாகாணங்களில் இருந்து எடுக்கப்பட்ட வழக்குகள் இதில் ஆவணப்படுத்தப் பட்டுள்ளன. அதில் 11 சதவீத வழக்குகள் பெண்கள் தொடர்புடையவை. விசாரணை என்ற பெயரிலும் வாக்கு மூலங்களைப் பெறுவதற்கும் சித்ரவதை செய்தல், அடித்தல், விசாரணை நபர்களின் மூச்சை நிறுத்தி துன்புறுத்துவது, மாடி யில் இருந்து தள்ளிவிடுவது மற்றும் உடலில் மின்சாரம் செலுத்துவது உள்ளிட்ட வன்முறைகளும் அடங்கும் என அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. 20 ஆண்டுகளாக அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் ஆப்கானிஸ்தானை சூறையாடிய பிறகு அதே தலிபான்களி டம் விட்டுச் சென்றன. தற்போது தலிபான்க ளின் ஆட்சி முன்னிலும் கொடூரமாக மாறி வருகிறது என தற்போதைய ஐநாவின் அறிக் கை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.
கோயில் பணியாளர்களுக்கு உயர்த்தப்பட்டது ஓய்வூதியம்
சென்னை, செப்.20- கோயில்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு உயர்த்தப் பட்ட ஓய்வூதிய தொகைக்கான காசோ லையை முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார். தமிழ்நாடு முழுவதும் இந்து சமய அறநிலையத் துறையின் நிர்வாக கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற கோயில் பணி யாளர்களுக்கு துறை நிலையிலான ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், வழங்கப் பட்டு வந்த ஓய்வூதியம் ரூ.3,000-லிருந்து ரூ.4,000-மாகவும், குடும்ப ஓய்வூதியம் ரூ.1,500-லிருந்து ரூ.2,000-மாகவும் உயர்த்தி அதற்கான காசோலைகளை வழங்கிடும் அடையாளமாக, ஓய்வு பெற்ற 5 கோயில் பணியாளர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறும் 5 பணி யாளர்கள் குடும்பத்தினருக்கு ஓய்வூ தியத்துக்கான காசோலைகளை தலைமைச் செயலகத்தில் இருந்து முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா மற்றும் துறை அதிகாரி கள் கலந்து கொண்டனர்.
9 மாவட்டங்களில் சங்கமம் - நம்ம ஊரு திருவிழா
சென்னை, செப். 20- சென்னை, காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களில் சங்கமம்-நம்ம ஊரு திருவிழா நடத்த ஏற்பாடு கள் நடைபெற்று வருகிறது. இது குறித்து கலை பண்பாட்டுத்துறை வெளியிட்ட அறிக்கை வருமாறு:- சென்னையில் கடந்த பொங்கல் விழாவையொட்டி 4 நாட்கள் 18 இடங்களில் சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா நடைபெற்றது. இது அனைத்து தரப்பு மக்களின் வரவேற்பை பெற்றதால், இந்த ஆண்டு மேலும் 8 முக்கிய நகரங்களுக்கு விரிவுபடுத்தப்படும் என்று அறி விக்கப்பட்டது. இதையடுத்து சென்னை, கோவை, தஞ்சாவூர், வேலூர், சேலம், திருநெல்வேலி, காஞ்சி புரம், மதுரை, திருச்சி ஆகிய இடங்களில் சங்கமம்- கலைத் திரு விழாவை நடத்தும் வகையில் நாட்டுப்புற கலை விழாக்கள் அக்டோபர், டிசம்பர் மாதங்களில் முதற்கட்டமாக நடத்தப்பட உள்ளது. இந்த கலை விழா மூலம் 3 ஆயிரம் நாட்டுப்புறக் கலைஞர் கள் பயன் அடைவார்கள். இதைத் தொடர்ந்து சென்னையில் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது பிரமாண்டமாக சங்கமம்-நம்ம ஊரு திருவிழா பல்வேறு இடங்களில் நடத்த முடிவு செய்ய ப்பட்டுள்ளது. இந்த விழா மூலம் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கலை ஞர்கள் பயன்பெறுவார்கள். சங்கமம்-நம்ம ஊரு திரு விழாவில் பங்குபெற விரும்பும் கலைக்குழுக்கள் தங்கள் கலை திறமையை வெளிப்படுத்தும் வகையில் 5 நிமிடம் ஓடக்கூடிய வகையில் வீடியோவை குறுந் தகடு அல்லது பென் டிரைவ்-ல் பதிவு செய்து, கலை பண்பாட்டுத் துறைக்கு இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து மண்டல கலை பண்பாட்டு மைய அலுவல கங்களுக்கு வரும் அக்டோபர் 6 ஆம் தேதிக்குள் பதிவு தபாலில் அனுப்ப வேண்டும். இந்த விண்ணப்பங்களை வைத்து கலை ஞர்களை தேர்ந்தெடுத்து நம்ம ஊரு திருவிழா கலை நிகழ்ச்சி களில் பங்கேற்க வாய்ப்புகள் அளி க்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.