ஈரோடு,செப்.8- ரூ.2,000 கோடி மதிப்புள்ள கோயில் நிலங்கள் மீட்கப் பட்டுள்ளதாக அமைச்சர் பி.கே. சேகர்பாபு தெரிவித்தார். ஈரோடு மாவட்டம் பண்ணாரி அம்மன் கோவிலில், ரூ.12 கோடி யில் ஒன்பது நிலை ராஜகோபுரம் அமைக்கும் இடத்தையும், ஈரோடு ஆருத்ர கபாலீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகப் பணி களையும் இந்து சமய அறநிலை யத்துறை அமைச்சர் சேகர்பாபு பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில்,“அடர்ந்த வனப்பகுதியை ஒட்டி இக்கோயில் அமைந்துள்ளதால், யானை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் உள்ளது. அவை கோயிலுக்குள் நுழைவதைத் தடுக்கும் வகையில், ரூ.2 கோடி மதிப்பீட்டில் புதிய சுற்றுச்சுவர் அமைக்கப்படும். பக்தர்களின் வசதிக்காக, கோயிலுக்கு அருகா மையில், 24 மணி நேரமும் செயல்படும் சிறிய மருத்துவமனை அமைக்கப்படும்” என்றார்.
திமுக ஆட்சி அமைந்த ஓராண்டில் 300 கோயில்களில் திருப்பணிகள் முடிந்து கும்பா பிஷேகம் நடத்தப்பட்டுள்ளது என்றும் சேலம் சுகனேஸ்வரர் கோயில், ஈரோடு ஆருத்ர கபாலீ ஸ்வரர் கோயில் திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேகம் தற்போது நடக்கிறது என்றும் அவர் தெரிவித்தார். கோட்டை மாரியம்மன் கோயிலில் மார்ச் மாதத்துக்குள் திருப்பணிகளை முடிக்க அறி வுறுத்தியுள்ளோம். கோயில்களில் அன்னைத் தமிழில் வழிபாடு செய்யும் வகையில், 14 போற்றிப் புத்தகங்களை அறநிலையத் துறை வெளியிட்டுள்ளது. பெரும்பாலான கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்யப்படுகி றது. தமிழில் அர்ச்சனை செய்ய வசூலிக்கப்படும் கட்டணத்தில், 60 விழுக்காடு அர்ச்சகருக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. இந்த ஆட்சி அமைந்த பின் ரூ.2,000 கோடி மதிப்பிலான கோயில் நிலங்கள் மீட்கப்பட் டுள்ளன. கோயில் நில மீட்பு தொட ரும் என்றும் அமைச்சர் கூறினார். அறநிலையத் துறை கூடுதல் ஆணையர் கண்ணன், மாவட்ட ஆட்சியர் கார்மேகம், மேயர் ராமச் சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.