சென்னை, செப். 11- திருக்குறளை அவ மதித்த ஆளுநர் ஆர்.என். ரவியைக் கண்டித்து, தமிழ் அமைப்புகள் ஞாயி றன்று ராஜ்பவனை முற்று கையிடும் போராட்டத்தை நடத்தின. தடையை மீறி பேரணி செல்ல முயன்ற அவர்களை போலீசார் கைது செய்தனர். மூத்த தலைவர் பழ.நெடுமாறன் தலைமை யில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பழ. கருப்பையா எம்.ஜி.கே. நிஜாமுதீன், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திரு முருகன் காந்தி, ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் வசீக ரன் உள்பட 100-க்கும் மேற் பட்டோர் கலந்துகொண்டனர்.