states

பெண் நீதிபதிகள் நியமனத்தில் முன்னிலை வகிக்கும் தமிழ்நாடு

சென்னை, ஜூலை 19 - தமிழகத்தில் பெண்கள் ஏராளமானோர் வழக்கறிஞர் களாக பதிவு செய்வதுடன், நீதித்துறையிலும் அதிக  எண்ணிக்கையில் பெண்கள் நீதிபதிகளாக தேர்ந்தெடுக்கப் படுவதாக சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி  கே.ஆர். ஸ்ரீராம் தெரிவித்துள்ளார். இதற்காக தமிழ்நாட்டைப்  பாராட்டுவதாகவும் அவர் கூறியுள்ளார். ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்திற்கு பணிமாறுதலில் செல்லும் தலைமை நீதிபதி கே.ஆர். ஸ்ரீராமுக்கு, உயர் நீதி மன்றத்தின் சார்பில் வழியனுப்பு விழா நடைபெற்றது. இதில்  ஏற்புரையாற்றிய அவர், “சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏராளமான பெண் வழக்கறிஞர்கள் ஆஜராகின்றனர். அதே போல் ஏராளமான பெண்கள் வழக்கறிஞர்களாக பதிவு  செய்கின்றனர். தமிழக நீதித்துறையில் புதிதாக தேர்ந்தெடுக் கப்பட்ட 213 நீதிபதிகளில் 130 நீதிபதிகள் பெண்கள். இதற்காக தமிழ்நாடு மாநிலத்தை பாராட்டுகிறேன்” என்று தெரிவித்தார். சென்னை உயர் நீதிமன்றத்தில், ஒன்பதரை மாத பதவிக் காலத்தில் அதிகளவில் கற்றுக் கொண்டதாகவும், முழு திருப்தியுடன் விடை பெறுவதாகவும் தலைமை நீதிபதி குறிப்பிட்டார்.  குறிப்பிடத்தக்க வகையில், இந்த வழியனுப்பு விழாவில்  தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் கலந்து கொள்ளவில்லை.