states

நாளை நாகப்பட்டினத்தில் மாபெரும் பேரணி

நாகப்பட்டினம், செப்.15- தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தின் 30 வது மாநில மாநாடு செப்டம்  பர் 17,18, 19 ஆகிய தேதிகளில் நாகப் பட்டினத்தில் நடைபெறுகிறது. மாநாட்டின் தொடக்கமாக இன்று (16-ஆம் தேதி) மாலை 4 மணிக்கு  மாநாட்டு வளாகத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தியாகத்தை  நினைவு கூரும் வகையில்  அமைக் கப்பட்டுள்ள கண்காட்சி  திறந்து வைக்கப்படுகிறது. செப். 17-ஆம் தேதி சனிக்கிழமை மாலை நான்கு மணிக்கு புத்தூர் ரவுண்டானாவில் இருந்து புறப் படும் பேரணி நாகப்பட்டினம் புதிய  பேருந்து நிலையம் அருகில் நிறைவு பெறுகிறது. பேரணியை சட்டமன்ற  முன்னாள்  உறுப்பினர் வி.மாரிமுத்து  துவக்கி வைக்கிறார். பொதுக்கூட்டத்  தில் அகில இந்திய விவசாயிகள் சங்கத் தலைவர் டாக்டர் அசோக்  தாவ்லே, பொதுச் செயலாளர் ஹன னன் முல்லா, கேரள நிதியமைச்சர் கே.என்.பாலகோபால், சங்கத்தின் துணைத்தலைவர் கே.பாலகிருஷ் ணன், மாநில பொதுச்செயலாளர் பெ. சண்முகம்,  மாநிலத் தலைவர் வி.சுப்ர மணியன், கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகைமாலி,  நாகப்  பட்டினம் மாவட்டத் தலைவர் எம்.என்.அம்பிகாபதி, கோவை.சுப்பிர மணியன் உள்ளிட்டோர் உரையாற்று கின்றனர்.  புதுவை சப்தர் ஹஸ்மி  கலைக் குழுவின்  கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. பிரதிநிதிகள் மாநாடு செப்.18,  19 ஆகிய தேதிகளில் நடைபெறு கிறது.

செப்.18-ஆம் தேதி காலை  மாநாட்டுக் கொடியை மூத்த தலை வர் எம்.நடராஜன் ஏற்றுகிறார்.  அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் தலைவர் டாக்டர் அசோக் தாவ்லே மாநாட்டை தொடங்கிவைக்கிறார்.  விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் பி.எஸ்.மாசிலா மணி, அகில இந்திய விவசாயிகள் மகாசபை மாநில செயலாளர் ஏ. சந்திரமோகன், அகில இந்திய விவ சாயிகள் - விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் ஆ. ரங்கசாமி ஆகியோர் மாநாட்டை வாழ்த்திப் பேசுகின்றனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலா ளர் பெ.சண்முகம் வேலை அறிக்கை மற்றும் அமைப்பு அறிக்கை யும், மாநில பொருளாளர் கே.பி. பெருமாள் வரவு செலவு அறிக்கை யையும் சமர்ப்பிக்கின்றனர். தொடர்ந்து ஞாயிறன்று நடை பெறும் மாநாட்டில் இந்திய தொழிற்  சங்க மையத்தின் (சிஐடியு) மாநிலத் தலைவர் அ. சவுந்தரராசன், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங் கத்தின் மாநில பொதுச் செயலாளர் வீ.அமிர்தலிங்கம் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர். அகில இந்திய விவசாயிகள் சங்  கத்தின் பொதுச் செயலாளர் ஹன்  னன் முல்லா மாநாட்டை நிறைவு  செய்து பேசுகிறார். வரவேற்புக் குழுச் செயலாளர் கோவை.சுப்பிர மணியன் நன்றி உரையாற்றுகிறார்.

;