states

நாங்குநேரி சம்பவம்: அறிக்கை சமர்ப்பிப்பு

சென்னை, ஆக.17- நாங்குநேரியில் வீடு புகுந்து பள்ளி மாண வரும், அவரது தங்கையும்  வெட்டப்பட்ட சாதிய வன்முறைச் சம்பவம் தொடர் பாக, பள்ளிக் கல்வித் துறை இயக்குநரிடம் நெல்லை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முதற்கட்ட விசாரணை அறிக்கையை சமர்ப்பித்துள்ளார். திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி பெருந் தெருவைச் சேர்ந்த கூலித் தொழிலாளி முனி யாண்டி - அம்பிகாபதி தம்பதியின் 17 வயது மகன்  வள்ளியூர் அரசு பள்ளியில் பிளஸ் 2 படிக்கிறார். அதே  பள்ளியில் படிக்கும் நாங்குநேரியைச் சேர்ந்த மாணவர்கள் கடந்த 9 ஆம்  தேதி இரவில் முனியாண்டி யின் வீட்டுக்குள் புகுந்து மாணவரையும், அவரது தங்கையும் அரிவாளால் வெட்டினர். படுகாயமடைந்த இருவரும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தை பார்த்த அவர்களது உறவினர் கிருஷ்ணன் அதிர்ச்சியில் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து,  மாவட்ட வருவாய்த்துறை மற்றும் பள்ளிக் கல்வித் துறை சார்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணை முடிந்து, நாங்கு நேரி சம்பவம் தொடர்பான முதற்கட்ட விசாரணை அறிக்கையை நெல்லை மாவட்ட முதன்மைக் கல்வி  அலுவலர் சின்ராசு, சென் னையில் உள்ள பள்ளிக்  கல்வித் துறை இயக்குநரிடம் சமர்ப்பித்துள்ளார். மேலும், இந்த அறிக்கை யுடன் சில பரிந்துரைகளும் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இச்சம்பவத்தில் படுகாயமடைந்துள்ள 17 வயது மாணவரை, விடுதியுடன் கூடிய வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்ய வேண்டும். இந்தத் தாக்குதலில் மாணவனுடன் சேர்ந்து காயமடைந்த அவரது சகோதரியையும் இந்தப் பள்ளியில் இருந்து வேறு பள்ளிக்கு மாற்ற வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவர், பொதுத் தேர்வு எழுதப் போகும் 12 ஆம்  வகுப்பு படித்தவர் என்ப தால், அவரை மனதளவில்  தயார்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட  பரிந்துரை கள் இடம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.