பாலஸ்தீனம் - இஸ்ரேல் அமைதிக்கான முன்னெடுப்பை இந்திய அரசு மேற்கொள்ள வலியுறுத்தி கோயம்புத்தூர் சிக்கண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இந்திய மாணவர் சங்கத்தின் தலைமையில், மாணவர்கள் சமாதான புறாக்களைப் பறக்க விட்டனர். முன்னதாக, இஸ்ரேல் போர்க்குற்றங்களை விசாரிக்க சர்வதேச விசாரணை நடத்த வேண்டும். இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பகுதிகளை விட்டு இஸ்ரேல் வெளியேற வேண்டும் என்கிற கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர். இந்திய மாணவர் சங்க மாநில துணைத் தலைவர் சம்சீர் அகமது, மாநிலக்குழு உறுப்பினர் ஷாலினி, மாவட்ட தலைவர் கல்கி ராஜ் மற்றும் திரளான மாணவர்கள் பங்கேற்றனர்.