சென்னை, அக்.9 நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே உள்ள கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ல் கொலை, கொள்ளை சம்பவம் அரங்கேறியது. இது தொடர்பாக மேற்கு மண்டல ஐஜி சுதாகர் தலைமை யில் 5 தனிப்படைகள் அமைக் கப்பட்டு விசாரணை நடை பெற்று வந்தது. முன்னாள் முதல மைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, விவேக் ஜெயராமன் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோர் விசாரிக்கப்பட்டனர். இந்நிலை யில் வழக்கு விசாரணையை சி.பி. சி.ஐ.டி.க்கு மாற்றி காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு உத்தரவிட்டார். விரைவில் விசாரணை துவங்க உள்ள நிலையில், கொட நாடு கொலை கொள்ளை வழக்கை விசாரிக்க சி.பி.சி.ஐ.டி போலீசார் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்துள்ளது. சி.பி. சி.ஐ.டி டி.ஜி.பி.ஷகில் அக்தர் உத்தரவின் பேரில், 2 கூடுதல் கண்காணிப்பாளர்கள், 3 துணை கண்காணிப்பாளர்கள் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டுள் ளது. கொடநாடு வழக்கு தொடர் பான விசாரணை ஆவணங் களை வாங்கிய பின் விரைவில் சிபிசிஐடி போலீசார் விசாரணை துவங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.