states

img

மகன்கள் கைது: தாய் தீக்குளித்து தற்கொலை

நெல்லையில் மகன்கள் கைதை தொடர்ந்து தாய் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில்  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
நெல்லை சுத்தமல்லியில் பல்வேறு கொள்ளை வழக்குகளில் தொடர்பு உள்ளது என்ற குற்றச்சாட்டின் பெயரில்  சகோதரர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர்.
மகன்கள் பிரசாந்த், பிரதீப் கைது செய்யப்பட்டதை கண்டித்து காவல்துறையினர் கண்முன்னே தாய் தீக்குளித்தார். இதில் படுகாயம் அடைந்த சகுந்தலா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து சுத்தமல்லி காவல்நிலையத்தில் நெல்லை எஸ்.பி மணிவண்ணன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.