states

img

பொதுவுடைமை பாடிய தமிழ் ஒளி

மே தினத்தை இந்தியா வில் முதலில் கொண்டா டியவர் சிங்கார வேலர் என்றால், முதலில் மே தினத்தை ‘உலகத் தொழிலாளர் ஒற்றுமையே, நல்லுணர்வே, அன்பே, இருட் கடலில் ஆழ்ந்திருந்து வந்த முத்தே, முழுநிலவே, மேதினமே வாராய் நீ வாராய் உனக் கெந்தன் வாழ்த்தை இசைக் கின்றேன்’ என்று வரவேற்றுப் பாடிய கவிஞர் தமிழ் ஒளிதான். குறிஞ்சிப்பாடியை அடுத்த ஆடூர் கிராமத்தில் தமிழ் ஒளி பிறந்தாலும், தந்தையின் ஊரான புதுச்சேரியின் மைந்தனாகவும் இருந்தார். விஜயரங்கம் என்ற இயற்பெயரை பாரதிதாசன்தான் தமிழ் ஒளி என்று மாற்றினார். பாரதி, பாரதிதாசன் வழியில் நடைபோட்ட தமிழ் ஒளி, பொது வுடைமை இயக்கத்தால் ஈர்க்கப்பட்டார்.  பொதுவுடைமை இயக்கம் புகுந்த தமிழ் ஒளி, வர்க்கப் போராட்டத்தில் உறுதியாக இருந்தாலும், கண்ணெதிரே இருந்த சாதிய, சமூக ஒடுக்கு முறை அவலங்களைத் தன் கவி தைகளில் கொண்டுவந்தார். இது தமிழ் ஒளியின் தனித்துவம். இந்தத் தனித்துவத்தைக் காட்டும் காவியம்தான் ‘வீராயி’.  தமிழ் ஒளிக்கு அடங்காத தமிழ்க் காதல் உண்டு. இந்தித் திணிப்பு, வடமொழித் திணிப்பு முதலியவற்றில் இன்று கம்யூனிஸ்ட் கட்சிகள் எடுத்திருக்கும் நிலைப்பாட்டை தமிழ் ஒளி காலத்துப் பொதுவுடைமை இயக்கம் எடுத்தி ருந்ததாகச் சொல்ல முடியாது. ஆனால், தமிழ் ஒளி அப்போதே அவற்றுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தார். தமிழ் ஒளி கவிஞர் மட்டும் அல்ல; சிறந்த கட்டுரையா ளர், விமர்சகர், ஆய்வாளர்.

 - சிகரம் ச.செந்தில்நாதன்

;