states

அணைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய சிறப்பு நிபுணர் குழு அமைத்து ஆய்வு செய்க!

சென்னை, செப்.25- தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சாமி.நட ராஜன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: பரம்பிக்குளம் - ஆழியாறு பாசனத் திட்டம் சுருக்கமாக பிஏபி திட்டம் என்ற ழைக்கப்படுகிறது. இத்திட்டம் 11 அணைகளைக் கட்டி அவற்றை இணைத்து உருவாக்கப்பட்ட ஆசியாவின் பொறி யியல் அதிசயமாகும். இத்திட்டத்தில் உள்ள முக்கியமான அணை பரம்பிக் குளம் அணையாகும். இதன் முழு கொள்ளளவு 17.82 டி.எம்.சியாகும். பரம்பிக்குளம் அணை கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் இருந்தாலும், இதனை தமிழ்நாடு பொதுப்பணித்துறை தான் நிர்வகித்து வருகிறது. சுமார் அறுபது ஆண்டுகளுக்கு முன் தொலைநோக்கு பார்வையோடு அப்போதைய கேரள மாநில முதல்வர் ஈ.எம்.எஸ் நம்பூதிரிபாட், தமிழக முதல்வர் காமராஜர் ஆகியோர் ஒப்பந்தம் செய்து நிறைவேற்றப்பட்டது தான் பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்டம். 

மழைப் பொழிவு மற்றும் அணையின் நீர் இருப்பை பொறுத்து, இந்த அணை யின் மூலம் தமிழகத்தில் திருப்பூர் மற்றும்  கோவை மாவட்டங்களில் சுமார் 4.25 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகிறது.  மேலும் லட்சக்கணக்கான மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் விளங்கி வரு கிறது. ஒவ்வொரு 6 மாதமும், ஒவ்வொரு  பகுதி விவசாயிகள் பாசனம் பெறும் முறைப்பாசன கால்வாய்களை கொண்ட தாக உள்ள இப்பகுதி ஏற்கனவே பற்றாக் குறை நீர் உள்ள பாசனப் பகுதியாக உள்ள நிலையில், பரம்பிக்குளம் அணையில் திடீரென்று 21.9.2022 அன்று நள்ளிரவு அணையின் நடு மதகு உடைந்து அணை யிலிருந்து தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது. பாசனத்திற்கும், குடிநீருக்கும் பயன்பட வேண்டிய அணையில் தேக்கி வைக்கப்பட்டிருந்த தண்ணீர் சுமார் 6 டி.எம்.சி வெளியேறிக் கொண்டுள்ளது. இப்பகுதி விவசாயிகளுக்கு மிகப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அதிகாரிகளின் அலட்சியமே காரணமாகும்.

வரவேற்கத்தக்கது

இந்த நிலையில் தமிழ்நாடு நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் மின்துறை அமைச்சர், நீர்வளத் துறையின் உயரதிகாரிகள், கேரள மாநிலம் சார்பில் பாலக்காடு சட்டமன்ற உறுப்பினர் மற்றும் இரண்டு மாநில உயரதிகாரிகள் உடனடியாக நேரில் சென்று அணையை பார்வையிட்டு ஆய்வு செய்தது வர வேற்கத்தக்கது. சென்னையிலிருந்து உயர்மட்ட நிபுணர் குழுவும் பரம்பிக் குளம் சென்றுள்ளது. இந்த நிபுணர்குழு முழுமையாக ஆய்வு செய்து வெளிப் படையாக அறிக்கையை வெளியிட வேண்டுமென தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்வ தோடு, ஒவ்வொரு ஆண்டும் பருவமழை, துவங்குவதற்கு முன் கோடை காலத்தில் அனைத்து அணைகளிலும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதற்காக பல நூறு கோடிகள் ஒதுக்கப்படுகிறது.

அதிகாரிகள் அலட்சியம்

அணைகளில் தண்ணீர் தேக்கு வதற்கு முன் அணையில் உள்ள மதகு களின் ரெகுலேட்டர்கள், அதன் உறுதித் தன்மைகள் முழுவதும் ஆய்வு செய்யப் படும் நிலையில், நீர்வளத்துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளபடி உடைப்பு ஏற்பட்ட இரண்டாவது மதகின் மீது கான்கிரீட் பேலன்ஸ் அமைப்பு கழன்று விழும் அளவிற்கு எப்படி பொறுப்பான அதிகாரி கள் அலட்சியமாக இருந்தனர் என்பதை உரிய முறையில் விசாரித்து, அவர்கள் மீது உடன் நடவடிக்கையை தமிழக அரசு எடுத்திட வேண்டும். மேலும் தமிழகம் இத னால் பாசனத்திற்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு விவசாயிகள் பாதிக்கப்பட்டால் அதற்கான உரிய இழப்பீட்டை தமிழக அரசு வழங்கிட வேண்டுகிறோம்.  தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அணைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய, சிறப்பு நிபுணர் குழுவை அமைத்து ஆய்வு செய்திட வேண்டும். தேவையான ஊழியர்களையும் நியமித்திட வேண்டு மென தமிழக அரசை தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் சார்பில் வலியுறுத்து கிறோம்.