போக்குவரத்துத் துறையில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பலரிடம் பணம் வாங்கி ஏமாற்றியதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம், அமைச்சர் செந்தில் பாலாஜி உள் ளிட்ட பலர் மீது புகார் அளிக்கப்பட் டது. இதையடுத்து அமலாக்கத் துறையினர் அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தனர். கரூரில் செந்தில் பாலாஜி சகோ தரர் அசோக் குமார் வீட்டில் அம லாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். கரூர் புறவழிச்சாலை யில் கட்டி வரும் புதிய பங்களா குறித்த ஆவணங்களுடன் உரிமை யாளர் நேரில் ஆஜராக, அசோக் குமாரின் மனைவிக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது. பின்னர் அந்த பங்களாவை அமலாக்கத் துறை முடக்கியது. இந்த வழக் கில் அசோக் குமார் நேரில் விசா ரணைக்கு வர வேண்டும் என அம லாக்கத்துறை 4 முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால் ஞாயி றன்று கொச்சியில் வைத்து கைது செய்தனர்.