states

img

மோடி அரசிடம் மூத்த குடிமக்களும் தப்பவில்லை வங்கி வட்டி விகிதத்தை விட அதிகரித்த பணவீக்கம்!

புதுதில்லி, அக்.13- நிரந்தர டெபாசிட் தொகை களுக்கு அளிக்கப்படும் வட்டியைக் காட்டிலும் பணவீக்கம் அதிகரித்து இருப்பதால், வங்கிகளில் நிரந்தர வைப்புநிதிக் கணக்கு வைத்துள்ள மூத்த குடிமக்கள் பாதிப்புக்கு உள் ளாகியுள்ளனர். நடப்பு நிதியாண்டில் சில்லரை பணவீக்கம் 5.3 சதவிகிதம் என்ற அளவில் இருக்கும் என ரிசா்வ் வங்கி அண்மையில் தனது நிதிக் கொள்கை யில் அறிவித்தது. இது மூத்த குடி மக்களின் நிரந்தர வைப்புத் தொகைக்கு வங்கிகள் வழங்கிவரும் வட்டி விகிதத்தை விட அதிகம் ஆகும். நாட்டின் மிகப்பெரிய பொதுத் துறை வங்கியான ‘ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI)’ மூத்த குடிமக்க ளின் ஓராண்டு நிரந்தர டெபாசிட் கணக்கிற்கு 5 சதவிகிதம் என்ற அள வில் வட்டி வழங்குகிறது. இந்த வட்டி விகிதமானது, ரிசா்வ் வங்கியின் பணவீக்க மதிப்பீட்டை விட 0.3 சத விகிதம் குறைவாக உள்ளது. இதே போல, மூத்த குடிமக்களின் 2 முதல் 3 ஆண்டுகளுக்கான டெபாசிட்டுக் களுக்கு 5.1 சதவிகித வட்டியை வங்கி கள் வழங்குகின்றன. இதுவும், நடப்பு நிதியாண்டின் பணவீக்க மதிப்பீடான 5.3 சதவிகிதத்தைக் காட்டிலும் குறைவுதான். இதனால், மூத்த குடிமக்கள் வங்கி களில் செய்யும் டெபாசிட்டுக்களால் என்ன லாபம்? 0.3 சதவிகிதம் நட்டம் தானா? என்ற கேள்வி எழுந்துள்ளது.  சிறுசேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்யலாம் என்றாலும், அதற்கும் 5.5 சதவிகிதம் என்ற அள விலேயே வட்டி வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.