ஆலப்புழா, மே 14- கேரள கயர் கார்ப்பரேசன் தயாரிப்புகள் விரைவில் வால்மார்ட்டிலும் கிடைக்கும். இதற்கான இருதரப்பு ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் வால்மார்ட்டுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளும் இந்தியாவின் முதல் பொதுத்துறை நிறுவனமாக கயர் கார்ப்பரேசன் இருக்கும். வால்மார்ட் குழு விரைவில் கேரளம் வந்து நிறுவனத்தைப் பார்வையிடும். வால்-மார்ட் என்பது அமெரிக்காவிலும் பிற நாடுகளிலும் தரமான தயாரிப்புகளை நியாயமான விலையில் வழங்கும் ஒரு பெரிய நிறுவனமாகும். அடுத்த மாதம், கயிறு தயாரிப்புகள் வால்மார்ட் மற்றும் சாம்ஸ் கிளப் ஆன்லைன் தளங்களில் கிடைக்கும். உலகெங்கிலும் உள்ள வால்மார்ட் கடைகளுக்கு வருவதற்கு முன்பே கயிறு தயாரிப்புகளை ஆன்லைனில் பெறலாம். தரக் கட்டுப்பாடு உள்ளிட்ட பல நடைமுறைகளுக்குப் பிறகு வால் மார்ட் கார்ப்பரேசனுடன் ஒப்பந்தம் ஏற்பட்டது. கயர் கார்ப்பரேசன் தலைவர் ஜி.வேணுகோபால் கூறுகையில், வால் மார்ட் உடனான ஒப்பந்தம் கயர் கார்ப்பரேஷனுக்கு உலகச் சந்தைக்கு புதிய கதவு திறக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு, தேசிய வடிவமைப்பு நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இதன் மூலம் கடந்த ஆண்டு வருவாய் 148 கோடியாக உயர்ந்தது என்றார்.