states

கேரள ஆளுநரின் தலைக்குள் புகுந்துவிட்ட ஆர்எஸ்எஸ் அரசியல் - இ.பி.ஜெயராஜன்

திருவனந்தபுரம், செப்.26- ஆர்எஸ்எஸ் அரசியல் கேரள ஆளுநரின் தலைக்குள் புகுந்துவிட்டது என்று இடது ஜனநாயக முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் இ.பி.ஜெயராஜன் கூறினார். ஆளுநரிடம் ஏதோ தவறு நடந்துள்ளது. எப்போதும் சிந்திக்கக் கூடாத வழி களில் பயணிக்கிறார். கேரளாவின் வளர்ச்சியை முடக்குகிறார் எனவும் குற்றம்சாட்டினார். விவசாயிகள் சங்க திருவனந்தபுரம் மாவட்ட மாநாட்டை  துவக்கி வைத்து இ.பி.ஜெயராஜன் மேலும் பேசுகையில், ஆர்எஸ்எஸ் தலைமையிலான பாஜக அரசு வகுப்புவாத அணி திரட்டலை தீவிரப்படுத்தி நாட்டில் அதிகாரத்தை உறுதிப்படுத்த முயற்சிக்கிறது என்றார். கார்ப்பரேட் - வகுப்புவாத கூட்டணி வலுப்பெற்றுள்ளது. தொழிலாளி வர்க்கம் இதன் சுமைகளை சுமக்கும். ஒன்றிய அரசின் கார்ப்பரேட் கொள்கைகள் விவசாயி களை கடனில் தள்ளியுள்ளது. ஒன்றிய அரசு விவசாயிகளை பாதுகாக்கவில்லை. கார்ப்பரேட் நிறுவனங்கள் பாஜக மீது ஆர்வம் காட்டுவதாகவும் தெரிவித்தார். வன்முறை அரசியலில் ஆர்வம் காட்டும் காங்கிரஸ் தலைமை, மாநிலத்தில் பிரச்சனைகளை உருவாக்குகிறது என்றார்.  காங்கிரசுக்கு லட்சியம் இல்லை. பாஜகவால் அவர்களை வாங்குவது சாத்தியம். யூடிஎப்- இன் அரசியல் சந்தர்ப்பவாதமானது. பாப்புலர் ஃப்ரண்ட் முஸ்லிம் சமூகத்தின் நலனைப் பாதுகாக்கவில்லை. சிறுபான்மை வகுப்புவாதத்தை பெரும்பான்மை வகுப்புவாதத்தால் எதிர்கொள்ள முடியாது. வகுப்புவாதத்திற்கு மதச்சார்பின்மைதான் தீர்வு என்றும் இ.பி.ஜெயராஜன் தெரிவித்தார்.

;