states

தனியார் பள்ளி மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு கட்டாயம்: பள்ளிக்கல்வி ஆணையர்

சென்னை,ஜூன் 24- மேல்நிலைப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையின் போது,  அவ்வப்பொழுது நடை முறையிலுள்ள இட ஒதுக்கீடு விகிதம் பாடப்பிரிவு வாரியாக  தனியார் பள்ளிகள் கடை பிடிக்கப்பட வேண்டும் என்று தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணை யர் சுற்றறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:- இட ஒதுக்கீடு தொடர்பான சட்டங்களின்படி, 2022-2023 ஆம் கல்வியாண்டிலும் மேல்நிலைக் கல்விக்கான மாணவர் சேர்க்கை நடைபெறும் பொழுது, மாநிலத்தின் அதி கார வரம்பிற்குள் செயல்படும் அனைத்து வகைப் பள்ளிகளி லும் (சிறுபான்மை கல்வி நிலை யங்கள் நீங்கலாக) பழங்குடியி னர், ஆதி திராவிடர் மற்றும்  பிற்படுத்தப்பட்டோர் மாணவர்க ளுக்கு இட ஒதுக்கீடு கீழ்க்கா ணும் விகிதத்தில் கடைபிடிக்கப் பட வேண்டும். பொதுப்பிரிவு 31 விழுக்காடு, பழங்குடியினர் 1 விழுக்காடு,  ஆதி திராவிடர் 18 விழுக்காடு (ஆதி திராவிட அருந்ததியர்கள் இருப்பின், 18 விழுக்காடு இடங்க ளிலிருந்து 3 விழுக்காடு இடங்களை அருந்ததியர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்). மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் 20 விழுக் காடு, பிற்படுத்தப்பட்ட இஸ்லாமி யர் 3.5 விழுக்காடு. பிற்படுத்தப் பட்டோர் 26.5 விழுக்காடு.

மாணவர் சேர்க்கையின்போது பொதுப்பிரிவினர்க்கான 31 விழுக்காடு இடத்திற்கான பட்டியல் முதலில் தயாரிக்கப் பட வேண்டும். இதில் மாண வர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே முன்னுரிமை வழங்க வேண்டும், பொதுப்பிரிவினர், ஆதி திரா விடர், பழங்குடியினர், பிற்படுத்தப் பட்ட பிரிவினர் என்ற எவ்வித பாகு பாடின்றி தயாரிக்க வேண்டும். அதன்பின்னர் அந்தந்த பிரிவுக் கான பட்டியல் தயாரிக்கப்பட வேண்டும். மாநிலத்தின் அதிகார வரம்பிற்குள் செயல்படும் அனைத்துவகை பள்ளிகளிலும் (சிறுபான்மை கல்வி நிலை யங்கள் நீங்கலாக) பாடப் பிரிவு  வாரியாக இட ஒதுக்கீடு  வழங்கப்பட்டு மேல்நிலைக்கல் விக்கான மாணவர் சேர்க்கை நடை பெற வேண்டும் என அனைத்து  முதன்மைக் கல்வி அலுவலர்க ளுக்கும் அறிவுறுத்தப்படுகிறது. மேலும், அனைத்துப் பள்ளி களுக்கும் இச்செயல்முறை ஆணையை அனுப்பி வைக்குமா றும் அறிவுறுத்தப்படுகிறார்கள். மேற்கூறியவாறு அனைத்து பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கையை உறுதி செய்யு மாறும் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவில் கூறப்பட் டுள்ளது.