states

துப்பாக்கிச் சூடு: எடப்பாடியை கைது செய்ய அரசுக்கு கோரிக்கை

சென்னை,அக்.19- ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது அரசு  பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டு பொதுமக்கள் மீது நடத்தப் பட்ட துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு அன்றைய முதலமைச்சர் எடப் பாடியே பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் மீது குற்ற வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை  எடுக்க வேண்டும் என்றும் சட்டப்பேர வையில் வலியுறுத்தப்பட்டது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் புதன்கிழமை (அக்.19) தூத்துக் குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஓய்வு  பெற்ற நீதியரசர் அருணா ஜெகதீசன் ஆணையம் தொடர்பாகத்  தமிழக முதலமைச்சர் விவாதத்தை முன்மொழிந்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம். சின்னதுரை, “தூத்துக் குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை தேவை. அப்போதைய மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சட்டப்படி நடக்காமல், தன்னிச்சையாகச் செயல்பட்டுள்ளனர். ஆகவே அவர்கள் மீது வழக்குப் பதிவு  செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அன்றைய முதலமைச் சர் எடப்பாடி மீதும் நடவடிக்கை  எடுக்க வேண்டும். அருணா  ஜெகதீசன் ஆணையம் குறிப்பிட்ட வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவதை அரசு உறுதி செய்ய வேண்டும். மாண வர்கள் மீது தொடரப்பட்ட வழக்கு களைத் தள்ளுபடி செய்ய வேண்டும்” என்றார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்  டி.ராமசந்திரன்,“ வேண்டு மென்றே 13 பேர் சுட்டுக் கொல்லப் பட்டுள்ளனர். அப்போதைய முதல்வர் தொலைக்காட்சியைப் பார்த்துத் தான் இந்த சம்பவத்தைத் தெரிந்து கொண்டேன் என்று சொன்னது வெட்கக் கேடானது. 17 காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உட்பட 4 பேர் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தர மாக மூடவேண்டும்” என்றார். ஜி.கே.மணி,“ தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம், மறைக்க முடியாத கரும்புள்ளி. அதற்காக அமைக்கப்பட்ட அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கையின் படி அனைவரின் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்”செல்வப்பெருந்தகை,“தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் அரசு வன்மத்தைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது.

அறவழியில் போராடியவர்கள் மீது வேண்டுமென்றே நடத்தப்பட்ட தாக்குதல் துரோகம். துரோகம் என்றால் அது அப்போதைய முதல மைச்சர் எடப்பாடி என்று தான் தெரியவரும். துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டவர்கள் மீது உரியச் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார். மதிமுவின் சதன் திருமலை குமார், “தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாகக் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் இதற்கு முதல்வர் உரிய நீதி வழங்க வேண்டும்” என்றார். தமிழக வாழ்வுரிமைக் கட்சி யின் வேல்முருகன்,“ தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் என்பது மக்கள் மீது அரசு தெரிந்தே வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டிருப்பதாகவும், மக்களைக் குறிவைத்து காக்கைகளைச் சுடுவது போலச் சுட்டுத் தள்ளியதாகவும், மனித படுகொலையை நடித் திருப்பதாகவும் தெரிவித்தார். இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக அப்போதைய முதல மைச்சர் எடப்பாடி தெரிவித்தது முதலமைச்சர் பதவிக்கு அவமான கரமானது என்றும் அவர் கூறினார். ஜவாஹிருல்லா,“தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக அமைக்கப்பட்ட அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கையின் அடிப்படை யில், அதில் குற்றம் சாட்டப்பட்டி ருக்கும் அனைவரின் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். துப்பாக்கிச் சூடு சம்பவம் நடை பெற்ற காலத்தில் எடப்பாடி பழனிச் சாமி முதலமைச்சராக இருந்தார். மக்களைப் பாதுகாக்க வேண்டிய வர், அதிலிருந்து தவறியதால் அவர் மீது குற்றவியல் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

;