சென்னை, மே 19- அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் சேர்க்கை விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டுமென தமிழக அரசுக்கு இந்திய மாணவர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. தமிழகத்தில் கல்லூரிக் கல்வி இயக்கு நரகத்தின் கீழ் 164 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற் றில் இளநிலை பட்டப் படிப்புகளில் 1.20 லட்சம் இடங்கள் உள்ளன. 2024-25ஆம் ஆண்டிற்கான இளநிலைப் பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் www.tngasa.in என்ற இணையதள முகவரியில் மே 6ஆம் தேதி முதல் துவக்கப்பட்டு பதிவு செய்து வரு கின்றனர். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி களில் சேர கடந்த 2022-23 ஆம் ஆண்டில் 2.98 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். 2023-24 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 3.02 லட்ச மாக அதிகரித்தது. நடப்பாண்டில் இது 3.50 லட்சத்தைக் கடக்கக்கூடும். ஆனால் இதுவரை 2.3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மட்டுமே விண்ணப்பித்துள்ள னர். ஆனால் இன்றுடன் (மே 20) அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க் கைக்கு விண்ணப்பிக்கும் தேதி நிறைவடை கிறது. மாணவர்கள் விண்ணப்பிக்கும் தேதி யை மேலும் நீட்டித்து, கால அவகாசம் வழங்க வேண்டும் என இந்திய மாணவர் சங்க மாநிலத் தலைவர் தௌ.சம்சீர் அக மது, மாநிலச் செயலாளர் கோ.அரவிந்த சாமி ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.