சென்னை, ஜூலை 13- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையில், ‘‘மாநகராட்சி மேயர்கள், துணை மேயர்கள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சி தலைவர்கள், துணைத் தலைவர்கள் மற்றும் மன்ற உறுப்பினர்களின் மக்கள் நலப் பணிகளை சிறப்பிக்கும் மற்றும் ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு மாதந்தோறும் மதிப்பூதியம் வழங்கிட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது. நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு மதிப்பூதியம் வழங்கி உத்தரவிட்டது போல் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் நிருவாகத் திறனையும் வலுப்படுத்துவதற்கு கிராமப்புற உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கும் மாதாந்திர மதிப்பூதியம் வழங்கிட வேண்டும்’’ எனக் கூறப்பட்டுள்ளது.