மதுரை, செப்.6- முதுநிலை மருத்துவப் படிப்பில் பணியில் உள்ள மருத்துவர்களுக்கு முன்னு ரிமை வழங்குவது தொடர் பான அரசாணையை ரத்து செய்ய மறுத்து, இதற்கு எதி ரான மனுவை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்துள்ளது. முதுநிலை மருத்துவப் படிப்பிற்கான சேர்க்கை தொடர்பாக பிறப்பிக்கப் பட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி மருத்துவர்கள் ஸ்ரீநந்தினி, பாக்கியராஜ், புதியசாமி, ஆனந்த் ஆகியோர் உயர்நீதி மன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடுத்தனர். அவர்கள் தாக்கல் செய்த மனுவில், “முதுநிலை மருத் துவப் படிப்பில் சேர்வது தொடர்பாக தமிழக அரசு கடந்த 2020 நவம்பரில் அர சாணை ஒன்றை பிறப்பித் தது. அதன் அடிப்படையில் முதுநிலை மருத்துவப் படிப் பில் 50 சதவீதம் இடங்களில் ஏற்கனவே மருத்துவப் பணி செய்து வரும் அரசு மருத்துவர்களுக்கு 50 சத வீத இடமும், சில முன்னுரி மைகளும் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால், அரசுப்பணியில் இல்லாத மருத்துவர்கள் சிர மத்திற்கு ஆளாவர். இது சட்ட விரோதமானது. ஆகவே, முதுநிலை மருத்துவர் சேர்க்கை தொடர்பாக 2020 நவம்பரில் பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்” என்று கூறியிருந்தனர். இந்த வழக்கின் மீதான விசாரணை செவ்வாயன்று நீதிபதி ஜி.ஆர்.சுவாமி நாதன் முன்பு நடைபெற்றது. அப்போது, “இந்த அரசா ணையை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட வழக் கும், மேல்முறையீட்டு வழக் கும் உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள் ளது. அதனடிப்படையில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கை மட்டுமே நடை பெற்றுள்ளது. ஆகையால் அதன் சாதக, பாதகங்கள் குறித்து முழுமையாக அறி யாமல் ரத்து செய்ய இய லாது என்றும் வருங்காலங் களில் பாதிப்புகள் இருப் பின் மனுதாரர்கள் நீதிமன் றத்தை அணுகலாம்” என்றும் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.