states

ஒன்றிய மோடி அரசை கண்டித்து ஜூலை 28 மாநிலந்தழுவிய ஆர்ப்பாட்டம்

சிஐடியு - விவசாயிகள், விவசாயத் தொழிலாளர் சங்கங்கள் அறைகூவல்'

சென்னை, ஜூலை 24- மணிப்பூர் பழங்குடி மக்கள் மீதான இன வெறித் தாக்குதலை தடுக்க தவறிய ஒன்றிய  மோடி அரசை கண்டித்து ஜூலை 28 அன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்திற்கு சிஐ டியு – தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் - அகில  இந்திய விவசாய தொழிலாளர் சங்கங்கள் அறைகூவல் விடுத்துள்ளன. இதுதொடர்பாக சிஐடியு மாநில பொதுச்  செயலாளர் ஜி.சுகுமாறன், தமிழ்நாடு விவ சாயிகள் சங்க பொதுச் செயலாளர் சாமி.நட ராஜன், அகில இந்திய விவசாயத் தொழிலா ளர் சங்க தமிழ் நாடு மாநிலப் பொதுச் செயலா ளர் வி.அமிர்தலிங்கம் ஆகியோர் கூட்டாக  வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியா வின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான  மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மே மாதம்  இரண்டு சமூகத்தினர் மத்தியில் ஏற்பட்ட கல வரத்தில் நூற்றுக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். தேவா லயங்கள், வீடுகள், கடைகள், அரசு அலு வலகங்கள் உட்பட தீ வைத்து கொளுத்தப்  பட்டன. இந்த நிலைமை இன்று வரை நீடித்துக்  கொண்டிருக்கும் நிலையில், இந்த கொடூர  சம்பவம் குறித்து பிரதமர் மோடி வாய் திறக்க வில்லை. மணிப்பூர் மாநில ஆளுங்கட்சியான பாஜகவின் முதல்வர் உண்மை நிலையை  மூடி மறைக்கிறார். இந்த அசாதாரண சூழ்  நிலையில் அம்மாநிலத்தில் கலவரத்தை தடுத்து அமைதியை ஏற்படுத்த ஒன்றிய அரசு  எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.  இந்த கலவரத்தில் இரண்டு பழங்குடி யினப் பெண்களுக்கு நிகழ்ந்த கொடூரமான  பாலியல் துன்புறுத்தல் வெளி உலகத்திற்கு  தெரியவர கலவரக்காரர்கள் பெயரளவிற்கு கைது செய்யப்பட்டுள்ளனர். அடுத்தடுத்து பெண்கள் மீதான வன்கொடுமைகள் தொட ர்ந்து வெளி வந்து கொண்டிருக்கின்றன.

ஆளும் பாஜக அரசின் துணையுடனும், அம்  மாநில காவல்துறையினர் கண் முன்பே இது  போன்ற படுபாதகச் செயல்கள் தொடர்ந்து கொண்டு தான் உள்ளன. இந்திய நாட்டுக்குள்  மணிப்பூர் குடிமக்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாக உயிரை பாதுகாத்துக் கொள்ள ஓடி ஒளிந்து கொண்டிருக்கிறார்கள். ஒன்றிய பாஜக ஆட்சியில் பெண்கள், தலித்துகள், பழங்குடி மக்கள் மீதான தாக்கு தல்கள் அதிகரித்து கொண்டே இருக்கின் றன. சமீபத்தில் கூட பாஜக ஆளும் மத்தி யப்பிரதேசத்தில் பழங்குடி வகுப்பை சார்ந்த ஒருவர் மீது பாஜக எம்எல்ஏவின் பிரதிநிதி சிறுநீர் கழித்த காட்சிகள் நெஞ்சத்தை பதற வைத்தது. அரசியல் ஆதாயத்திற்காக சொந்த நாட்டு மக்களிடையே மத,சாதிய உணர்வுகளை தூண்டி மோத விடும் பாஜக வின் மதவெறி கலவரத்தால் தொழிலா ளர்களும், விவசாயிகளும், விவசாய தொழி லாளர்களும் கடுமையாக பாதிக்கப்படு கின்றனர். இந்நிலையில், மணிப்பூர் மாநிலத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள், பொதுமக்கள் மற்  றும் தொழிலாளர்கள், விவசாயிகள், விவசா யத் தொழிலாளர்களுக்கு சகோதர ஆத ரவையும், ஒற்றுமையையும் வெளிப்படுத்த முன்வருமாறு தமிழ்நாடு உழைக்கும் வர்க்கத்திற்கு அறைகூவல் விடுக்கிறோம். மேலும் மாவட்ட தலைநகரங்களில் ஜூலை  28 அன்று நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்  தில் பெருந்திரளாக பங்கேற்க வேண்டுமென கேட்டுகொள்கிறோம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.