states

கர்நாடக சட்டப்பேரவை வளாகத்தில் ஜேடிஎஸ் எம்எல்ஏ- எம்எல்சிக்கள் போராட்டம்!

பெங்களூரு, செப்.14- கர்நாடகா மாநில பாஜக அரசு,  ‘இந்தி மொழி தினம்’ கொண்டாடு வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அம்  மாநில முன்னாள் முதல்வர் குமார சாமி தலைமையில் மதச்சார்பற்ற ஜனதா கட்சி எம்எல்ஏ-க்கள், எம்எல்சிக் கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒன்றிய அரசால், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 14-ஆம் தேதி  ‘இந்தி திவாஸ்’ (இந்தி மொழி தினம்) கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்கு தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில்  எதிர்ப்பு எழுந்தாலும், ஒன்றிய பாஜக அரசு இந்தித் திணிப்பின் ஒரு  முயற்சியாக, பிடிவாதமாக இந்தி மொழி தினத்தை கடைப்பிடித்து வரு கிறது. அந்த வகையில், கர்நாடகத் தில், அம்மாநில பாஜக அரசு, ‘இந்தி திவாஸ் -2022’ (இந்தி மொழி தினம்) கொண்டாட்டத்தை அறி வித்திருந்தது. இதுதொடர்பான அறிவிப்பு வெளியானதுமே, கர்நாடக முன் னாள் முதல்வரும், மதச்சார்பற்ற ஜனதாதளம் (JDS) தலைவருமான எச்.டி. குமாரசாமி, கர்நாடகா முதல்  வர் பசவராஜ் பொம்மைக்கு கடிதம் ஒன்றை அனுப்பி தனது எதிர்ப்பைத் தெரிவித்திருந்தார்.

இந்தி திவாஸ் கொண்டாட்டம் என்ற பெயரில் இந்தியை திணிக்கும்  முயற்சிக்கு எதிராக தனது கட்சி சார்பில் செப்டம்பர் 14 அன்று போராட் டங்கள் நடைபெறும் என்று அறி வித்திருந்தார். அதன்படியே, இந்தி திவாஸ்  கொண்டாட்ட நாளான புதனன்று, மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சி  எம்எல்ஏக்கள் மற்றும் எம்எல்சிக்கள் கர்நாடக சட்டப்பேரவை வளாகத்தி லுள்ள காந்தி சிலை முன்பு போராட்  டம் நடத்தினர். எச்.டி குமாரசாமி தலைமையில் நடைபெற்ற இந்த  போராட்டத்தில், இந்தி மொழித்  திணிப்புக்கு எதிரான பதாகைகளை  ஏந்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

மோடி - அமித்ஷா

இதனிடையே, இந்தி திவாஸை முன்னிட்டு, பிரதமர் மோடி, உள் துறை அமைச்சர் அமித்ஷா ஆகி யோர் டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து  தெரிவித்திருந்தனர்.  “இந்தியாவுக்கு இந்தி மொழி பெருமை தேடிக் கொடுத்துள்ளது. இந்தி மொழியின் எளிமை, தனித்  தன்மை அனைவரையும் ஈர்க்கிறது” என்று பிரதமர் மோடியும், “இந்தி  மொழிதான் இந்தியாவை இணைக்  கும் பாலம். அனைத்து இந்திய மொழிகளுக்கு இந்தி மொழி நட்பு மொழி” என்று அமித்ஷாவும் கூறி யிருந்தனர்.

ராகுல் காந்தி

மறுபுறத்தில், “ உணர்வுகளால் அமைந்ததே மொழிகள். அனைத்து மொழிகளும் அழகா னவை. ஒவ்வொரு மொழியும் இந்தியாவின் பன்முகத்தன்மையை யும், கலாச்சாரத்தையும் பிரதி பலிக்கின்றன” என காங்கிரஸ் தலை வர் ராகுல் காந்தி டுவிட்டரில் பதி விட்டிருந்தார்.