சென்னை,ஏப்.6- சொத்து வரி உயர்வை விருப்பத்து டன் செய்யவில்லை என்றும் புதிய பிரதிநிதிகள் தேர்வு செய்யப் பட்டுள்ளதால் உள்ளாட்சி அமைப்பு களை சமாளிப்பதற்கு வரி உயர்வு தேவை என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் புதனன்று(ஏப்.6) கேள்வி நேரம் முடிந்ததும் சொத்து வரி உயர்வு குறித்து எதிர்க் கட்சிகள் மற்றும் தோழமை கட்சிகள் கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானம் சிறப்பு கவன ஈர்ப்பாக எடுத்துக்கொள்ளப்பட்டது. அதன்மீது விவாதங்களுக்கு பிறகு பதில் அளித்த அமைச்சர் கே.என். நேரு, “தமிழ் நாட்டில் சொத்து வரி விகிதங் களை மாநில உள்நாட்டு வளர்ச்சிக்கு ஏற்றவாறு ஆண்டுதோறும் உயர்த்த வேண்டும் என்று ஒன்றிய அரசு நிபந்தனை விதித்துள்ளது. ஒன்றிய அரசின் தூய்மை இந்தியா திட்டம், அம்ரூத் 2.0 ஆகிய திட்டங்களின் கீழ் நிதி பெறுவதற்கு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சொத்துவரி குறித்த அறிக்கையை வெளியிடுவது
கட்டாயம் என்று திட்ட வழிகாட்டுதலை ஒன்றிய அரசால் வகுத்துரைக்கப்பட்டுள்ளது. எனவே, மாநிலத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டுதான் ஏழை எளிய மக்களை பாதிக்காதவாறு வரி உயர்த் தப்பட்டிருக்கிறது” என்றார். இதைதொடர்ந்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்,“ சொத்து வரி உயர்வு குறித்து எதிர்க்கட்சித் தலை வர்கள், எங்களுடைய கூட்டணியில் இடம் பெற்றிருக்கக்கூடிய தலை வர்கள் உள்பட அனைவரும் தங்க ளுடைய கருத்துக்களை எடுத்து வைத் திருக்கிறார்கள். இந்த சொத்து வரி உயர்வை அரசு மனமுவந்து செய்ய வில்லை. விருப்பத்துடன் செய்ய வில்லை. புதிய பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதால் உள்ளாட்சி அமைப்புகளை சமாளிப்பதற்கு வரி உயர்வு தேவை. ஏழை, நடுத்தர மக்களை பாதிக்காமல் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. சொத்து வரி உயர்வு தவிர்க்க முடியாது என்பதால் மக்கள் துணை நிற்க வேண்டும்” என்றார். கட்சி வேறுபாடின்றி நான் சொல்ல விரும்புவது, அரசின் இந்த முடிவுக்கும், மக்கள் நலத் திட்டங்களை, வளர்ச்சித் திட்டங்களை உள்ளாட்சி அமைப்புகள் நிறைவேற்றிடவும், மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் துணை நிற்க எதிர்கட்சி மற்றும் எங்கள் தோழ மைக் கட்சிகளுக்கும் எனது அன்பான ஒரு வேண்டுகோள்! மாநில வளர்ச்சி யில் எவ்வித அரசியலும் செய்ய வேண்டாம் எனவும் முதலமைச்சர் கூறினார்.