states

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து...

https://www.facebook.com/ComradeSRY/
https://twitter.com/SitaramYechury

பிரதமர் நரேந்திர மோடி தெற்கு உலகின் தலைவராக தன்னை முன்னிறுத்திக் கொள்கிறார். ஆனால் உண்மையில் தெற்கு உலக நாடுகளோடு அவர் நெருக்கமாக இருக்கிறாரா என்பது மிகப்பெரிய கேள்வி.
கியூபத் தலைநகர் ஹவானாவில் அடுத்த வாரம் ஒரு முக்கிய மாநாடு நடைபெறுகிறது. ஜி77+சீனா உச்சி மாநாடுதான் அது. ஜி77 என்பது முற்றிலும் வளர்முக நாடுகளின் அமைப்பு ஆகும். 1964ல் 77 நாடுகளை கொண்டு உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு தற்போது உலக முழுவதும் உள்ள வளர்முக நாடுகளில் 134 நாடுகளை தனது உறுப்பு நாடுகளாக வைத்திருக்கிற மாபெரும் அமைப்பு.
இந்த மாநாட்டில் பங்கேற்க இந்தியாவிலிருந்து ஒரு அமைச்சர் கூட செல்ல மாட்டாராம். இவர் எப்படி தெற்கு உலகின் தலைவர்?