states

காய்கறி விலை உயர்வால் மக்கள் அவதி

சென்னை,ஜூலை 4- தமிழகத்தில் கடந்த ஒரு மாத  காலமாக தக்காளி, இஞ்சி, சின்ன வெங்காயம் உள்ளிட்ட காய்கறியின் விலை வேகமாக உயர்ந்துவருகிறது. கோயம்பேடு சந்தையில் 50-ல் இருந்து 60 ரூபாய் வரையில் விற்கப் படும் ஒரு காய்கறியின் விலை மளிகை கடைக்கு விற்பனைக்காக வரும்போது மேலும் உயர்ந்து விடுகிறது. லாரி வாடகை, கூலி என அனைத்தையும் கொடுத்து விட்டு சில்லறை கடைகளில் பொதுமக்களின் கைக்கு போய் காய் கறிகள் சேரும்போது அதன் விலை 80 லிருந்து 90 ஆக உயர்ந்து வருகிறது. இதன் காரணமாகவே பொதுமக்கள் அதிக விலை கொடுத்து காய்கறிகளை வாங்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ள ப்பட்டுள்ளனர். இந்த காய்கறிகள் அனைத்தும் மே மாதம் வரையில் கிலோ  ரூ10 விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஆனால் அடுத்தடுத்து பெய்த மழை சேதங்களால் ஆந்திரா, கர்நாடகாவில் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டு விளைச்சல் சரிந்துள் ளது. இதுவே இந்த விலைஉயர்வுக்கு காரணம் என்று வியாபாரிகள் தெரி விக்கின்றனர்.  இந்த விலை உயர்வு இன்னும் ஒரு மாதத்திற்கு மேல் நீடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் வியாபாரிகள் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர்.

;