சென்னை, அக்.2- மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு: அரியலூர் மாவட்டத் தில், நுகர்வோர் குறைதீர் ஆணைய நீதிபதி ராம்ராஜ் முன் வந்த 16 வழக்குகளில் ரூ.1 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது பத்திரிகை செய்தியாகியுள் ளது. இது பாராட்டுக்குரியது. சுற்றுலா, இன்சூரன்ஸ் மற்றும் கட்டுமான நிறு வனங்கள் செய்த தவறுக் காக அபராதம் செலுத்த நேர்ந்துள்ளது. பாதிக் கப்பட்ட மக்கள் நிவாரணம் பெற்றுள்ளார்கள். இதுபோன்ற வழக்கு கள் மக்களிடையே பிரபல மாக்கப்பட வேண்டும். தர மான சேவை, தொழில் முறை களை உறுதி செய்ய இந்த நடவடிக்கை அவசியமான ஒன்று. அரசு திட்டமிட்ட விதத் தில், நுகர்வோர் குறைதீர் ஆணையத்தையும், நுகர் வோர் உரிமைகள் தொடர் பான விழிப்புணர்வையும் மக்களிடையே பிரபல மாக்க வேண்டும் என வலி யுறுத்துகிறோம். இவ்வாறு அதில் தெரி வித்துள்ளார்.