கருக்கா வினோத் மீது என்ஐஏ வழக்கு
சென்னை, நவ.14- சென்னை ஆளுநர் மாளிகை சாலையில் பெட் ரோல் நிரப்பிய பாட்டில் களை வீசியது தொடர்பான வழக்கில் சென்னை நந்தனம் எஸ்.எம்.நகரை சேர்ந்த கருக்கா வினோத் கைது செய்யப்பட்டார். அவர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, காவல்துறையினர் சிறையி லடைத்தனர். ஓரிரு நாட் களுக்கு முன், அவர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய ப்பட்டார். இந்த நிலையில், கருக்கா வினோத் மீது தேசிய பாது காப்பு முகமை (NIA) கூட்டுச் சதி உள்ளிட்ட மூன்று பிரிவு களில் வழக்குப்பதிவு செய்துள்ளது.
சிறப்பான சேவையாற்றிய ‘108’ ஆம்புலன்ஸ்
மதுரை, நவ.14- நவம்பர் 12 தீபாவளி யன்று “108”-சேவை 7,292 பேர் பயன்பெறும் வகையில் 7,258 ஆம்புலன்ஸ்களை அனுப்பியுள்ளது. ‘108’ எண்ணுக்கு வந்த மொத்த அழைப்புகளில் 2,566 அழைப்புகள் வாகன விபத்துகள் தொடர்பான வை. 641 அழைப்புகள் மகப்பேறு தொடர்பானது. இவை தவிர ஆம்புலன்ஸ் ஊழியர்கள் தீக்காயம டைந்த 208 பேருக்கு சிகிச்சை யளித்துள்ளனர். சராசரியாக, நாளொன்று க்கு 5,000 பயனாளிகள் 108- சேவையை நாடும் நிலை யில், தீபாவளியன்று, கூடுத லாக 45 சதவீதம் பேர் பயன் பெற்றுள்ளனர்.
60 அடியை எட்டியது மேட்டூர் அணை
சேலம், நவ. 14- அணையில் இருந்து பாச னத்துக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டு இருப்பதா லும், மழை காரணமாக அணைக்கு நீர்வரத்து இருந் ததாலும், மேட்டூர் அணை யின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. செவ்வாய்க்கிழ மை நிலவரப்படி, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 59.73 அடியில் இருந்து 60.07 அடி யாக உயர்ந்துள்ளது. குடி நீர் தேவைக்காக மட்டும் மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 250 கனஅடி தண்ணீர் வெளியேற்றப் பட்டு வருகிறது. பெரியாறு அணை-130.95 அடியாகவும், வைகை அணை-70.41 அடி யாகவும் உள்ளன.
சபரிமலைக்கு சிறப்புப் பேருந்துகள்
சபரிமலை செல்லும் பக்தர்கள் வசதிக்காக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அரசு போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது. நவம்பர் 16-ஆம் தேதி முதல் ஜனவரி 16-ஆம் தேதி வரை சென்னை, மதுரை, திருச்சிராப்பள்ளி, கடலூர் பகுதிகளிலிருந்து நவீன சொகுசுப் பேருந்துகள் இயக்கப்படுகிறது.
உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையில் 25.88 லட்சம் அதிகரித்துள்ளது
திருவனந்தபுரம், நவ.14- இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில், கேரளத்தில் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் பி.ஏ. முஹம்மது ரியாஸ் தெரிவித்தார். 2022ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் 19.34 சதவீதம் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் 1.59 கோடி உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். கடந்த ஆண்டு இது 1.33 கோடியாக இருந்தது. இந்த ஆண்டு 25.88 லட்சமாக அதிகரித்துள்ளது. கோவிட்டுக்கு முந்தைய புள்ளிவிவரங்களை விட 21.12 சதவிகித வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. எர்ணாகுளம் மாவட்டம் அதிகபட்சமாக 33,18,391 உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கொண்டுள்ளது. இடுக்கி - 26,61,934, திருவனந்தபுரம்- 25,61,787, திருச்சூர் -18,22,020, வயநாடு 12,87,166 என பயணிகள் வருகை உள்ளது. இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரை கேரளத்துக்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகையும் அதிகரித்துள்ளது. இந்த காலகட்டத்தில் 4,47,327 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மாநிலத்திற்கு வருகை தந்துள்ளனர். கடந்த ஆண்டைவிட 116.25 சதவிகித வளர்ச்சியுடன் வெளிநாடுகளில் இருந்து பயணிகள் வருகை அதிகரிப்பு 2,06,852 ஆக உள்ளது. வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகையில் எர்ணாகுளம் - 2,04,549 என முதலிடத்தில் உள்ளது. மற்ற மாவட்டங்களின் நிலை திருவனந்தபுரம் - 98,179, இடுக்கி - 68,798, ஆலப்புழா - 19,685, கோட்டயம் - 15,112 ஆகும்.