உதகை, ஜூலை 15- ஆர்எஸ்எஸ் தேசிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடத்த, ஒரு வாரம் விடுமுறை விட்ட உதகை தனியார் பள்ளிக்கு விளக்கம் கேட்டு கல்வித் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நீலகிரி மாவட்டம், உதகையில் உள்ள ஜேஎஸ்எஸ் தனியார் பள்ளியில் கடந்த ஜூலை 10 ஆம் தேதியன்று ஆர்எஸ்எஸ் தேசிய மற்றும் மாநில நிர்வாகிகள் கூட்டம் துவங்கியது. இதில் ஆர்எஸ்எஸ் தேசிய தலைவர் மோகன் பகவத் உள்ளிட்ட தேசிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னதாக, ஆர்எஸ்எஸ் கூட்டத்திற்காக தனியார் பள்ளிக்கு ஒரு வாரம் விடுமுறை அறி விக்கப்பட்டது. ஏற்கனவே, நீலகிரியில் மழை காரணமாக பல நாட்கள் விடு முறை விடப்பட்டுள்ள நிலையில், தற்போது ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்காக மேலும் ஒரு வாரம் விடுமுறை விடப்பட்ட சம்பவம் பெற்றோரை அதிருப்தி அடைய செய்தது. எனவே பெற்றோர் இது குறித்து கல்வித்துறை அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தனர். இதனடிப்படை யில் மாவட்ட கல்வி அலுவலர் பார்த்த சாரதி, ஜேஎஸ்எஸ் பள்ளிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதுகுறித்து நீலகிரி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கீதா கூறுகை யில், உதகை தீட்டுக்கல் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில், கல்வித்துறை அதிகாரியிடம் எந்தவித அனுமதியும் பெறாமல் ஒருவாரம் விடுமுறை விடப் பட்டுள்ளதாக புகார் வந்தது. இதன் அடிப்படையில் விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்திற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் கொடுக் கப்பட்டுள்ளது. தனியார் பள்ளி நிர்வா கம் கொடுக்கும் விளக்கத்தின் அடிப்ப டையில், உயரதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.