சென்னை, ஜூலை 19- தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணை யத்தின் உத்தரவு அடிப்படையில், ஜூலை 1 ஆம் தேதி முதல் மின் கட்டணம் உயர்த்தப் பட்டது. யூனிட் ஒன்றுக்கு 20 பைசா முதல் 55 பைசா வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, கடந்த ஜூலை 15 முதல், புதிய இணைப்பு கட்டணம், மீட்டருக்கான வைப்புத் தொகை, பதிவு, மேம்பாட்டுக் கட்டணம் ஆகியவற்றுக்கான சேவைக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. அதன்படி, வீட்டு உபயோகம், குடி யிருப்புகளுக்கான பொது மின் உப யோகம், அரசு கட்டடங்கள், விசைத்தறி, தொழில் பிரிவுகள், வர்த்தக நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு ஒருமுனை மின் இணைப்புக்கு ரூ. 1,020 ஆக இருந்த கட்டணம் ரூ. 1,070 ஆகவும், மும்முனை இணைப்புக்கு ரூ. 1,535 ஆக இருந்த கட்டணம் ரூ. 1,610 ஆகவும், 50 கிலோவாட் முதல் 150 கிலோ வாட் வரையிலான பயன் பாட்டுக்கு ரூ. 2,045 ஆக இருந்த கட்டணம் ரூ. 2,145 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், உயர் மின்னழுத்த இணைப்பு களுக்கு மீட்டர் வாடகை ரூ. 3,780-ல் இருந்து ரூ. 3,965 ஆக உயர்ந்துள்ளது. மீட்டர், மின் இணைப்புப் பெட்டி பழுது, இணைப்பை வேறு இடத்திற்கு மாற்று தல் ஆகியவற்றை பொறுத்தவரை, ஒரு முனை இணைப்புக்கு ரூ. 1,020-ல் இருந்து ரூ. 1,070 ஆகவும், மும்முனை இணைப்புக்கு ரூ. 1,535-ல் இருந்து ரூ. 1,610 ஆகவும், 50 கிலோ வாட் முதல் 150 கிலோ வாட் வரையி லான பயன்பாட்டுக்கு ரூ. 2,045 என்பது ரூ. 2,145 ஆகவும், உயர் மின்னழுத்த இணைப்புக்கு ரூ. 4,085 என்பது ரூ. 4,280 ஆகவும் உயர்ந்துள்ளது. மீட்டருக்கான டெபாசிட் தொகை, ஒருமுனை இணைப்புக்கு ரூ. 765 ஆக இருந்தது ரூ. 800 ஆகவும், மும்முனை இணைப்புக்கு அதன் திறன் வாரியாக, ரூ. 2,045, ரூ. 7,050, ரூ. 8,480 என இருந்த தொகை, ரூ. 2,145, ரூ. 7,390, ரூ. 8,890 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஸ்மார்ட் மீட்டர் ஒரு முனை இணைப்புக்கு ரூ. 5,315 என இருந்தது ரூ. 5,570 ஆகவும், மும்முனை மீட்டருக்கு ரூ. 7,255, ரூ. 8,430 என இருந்த வைப்புத் தொகை ரூ. 7,605, ரூ. 8,835 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மறு இணைப்பு, பெயர் மாற்றம், குறைந்த அழுத்த இணைப்பு, உயர் மின்னழுத்த இணைப்பு, மேம்பாட்டுக் கட்டணம், மின்கம்ப இணைப்பு, கேபிள் வழி யான இணைப்பு, பாதுகாப்பு வைப்புத் தொகை கட்டணங்களும் உயர்த்தப் பட்டுள்ளன.