states

நேபாளம் : மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு?

காத்மண்டு, ஜூலை 3- நேபாள அரசியலில் நிலவும் நிச்சய மற்ற நிலையால், தற்போது ஆட்சியில் உள்ள புஷ்பகுமார் தஹல் என்ற பிரச்சந்தா  தலைமையிலான அரசு மீண்டும் நம்பிக்கை கோரும் தீர்மானத்தைக் கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொதுத் தேர்தலுக்குப் பிறகு ஆட்சியில் அமர்ந்தபோது ஜனவரி மாதம்  10 ஆம் தேதியன்று நம்பிக்கைத் தீர்மானம்  வந்தது. மொத்தமுள்ள 275 உறுப்பினர் களில் 268 பேர் அரசுக்கு ஆதரவு தெரி வித்தார்கள். அதன்பிறகு ஏற்பட்ட அரசியல் மாற்றங்களால் நேபாள கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்டு-லெனினிஸ்டு)கட்சியும், ராஷ்டிரிய பிரஜாதந்திரக் கட்சியும் அரசுக்கான ஆதரவை விலக்கிக் கொண்டன.  இதனால் மார்ச் 20 ஆம் தேதியன்று மீண்டும் நம்பிக்கைத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதில் 172 உறுப்பினர்கள் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தார்கள். மூன்று சுயேட்சை உறுப்பினர்கள் உள்ளிட்டு பல்வேறு கட்சிகள் தங்கள் ஆதரவைத் தெரிவித்தன. ஆனால், ஜூன் மாத நிறைவில் நிதிநிலை அறிக்கை கொண்டு வரப்பட்டபோது அதற்கு 147 உறுப்பினர்களின் ஆதரவு மட்டுமே கிடைத்தது. பெரும்பான்மை ஆதரவை விட வெறும் ஒன்பது உறுப்பினர்கள்தான் அதிகமாக ஆதரவு தருகிறார்கள்.  இதில் நிதிநிலை அறிக்கைக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்து, அரசுக்குத் தந்து  வரும் தனது ஆதரவை விலக்கிக் கொள்ளப் போவதாக ஜனாமத் கட்சி அறிவித்திருக் கிறது. இந்தக் கட்சிக்கு நாடாளுமன்றத்தில் ஆறு உறுப்பினர்கள் உள்ளனர். இவர்கள் தங்களது ஆதரவை விலக்கிக் கொண்டாலும் பெரும்பான்மைக்குப் போதுமான ஆதரவு இருக்கும். ஆனால் சுயேட்சைகள் உள்ளிட்ட சிறிய கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தால் அரசு கவிழ்ந்துவிட நேரிடும். இந்நிலையில், நம்பிக்கைத் தீர்மானம் எதுவும் கோர வேண்டிய அவசியம் இப்போது இல்லை என்று மாவோயிஸ்டு மையம் கூறியுள்ளது.

;