states

தீக்கதிர் விரைவு செய்திகள்

‘நாடாளுமன்ற கட்டடத்திற்கு அம்பேத்கர் பெயர்!’

தில்லியில் புதிய நாடாளுமன்றக் கட்டடம் கட்டும் பணியை பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2020-ஆவது ஆண்டு டிசம்பரில் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். அந்த கட்டடத்தின் மேற்கூரை யில் அமைக்கப்பட்ட தேசியச் சின்னத்தை அண்மையில் அவர் திறந்து வைத்தார். தற்போது இறுதி  கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், புதிய நாடாளுமன்றக் கட்டடத்திற்கு டாக்டர் பி.ஆர்.  அம்பேத்கர் பெயரின் வைக்க வேண்டும் என்று தெலுங்கானா மாநில சட்டப்பேரவை செவ்வா யன்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. முன்னதாக மாநில எரிசக்தி துறை அமைச்சர் ஜெகதீஷ் ரெட்டி, இந்த தீர்மானத்தைக் கொண்டு வந்தார்.

பாஜக பேரணி; வன்முறை; தீ வைப்பு!

மேற்கு வங்க மம்தா பானர்ஜி அரசில் ஊழல் மலிந்து விட்டதாக கூறி, பாஜக-வினர்  அம்மாநில தலைமை செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை அறிவித்திருந்த னர். அதன்படி, சட்டப் பேரவை எதிர்க்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரி, பாஜக தேசிய துணைத்தலை வர் திலீப் கோஷ் உள்ளிட்டோர்  தலைமைச் செயலகம் பகுதியை நெருங்கியதும் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதேபோல ஹவுரா பகுதியில் பேரணியாக வந்த  பாஜகவினரை, கலைப்பதற்காக போலீசார் தண்ணீரைப் பீய்ச்சி அடித்தனர். அத்துடன் கண்ணீர் புகைக் குண்டுகளையும் வீசினர். அப்போது ஏற்பட்ட வன்முறையில் காவல் துறை வாகனம் தீ வைக்கப்பட்டது.

நிதியமைச்சர் இப்போதாவது கவலைப்படுவாரா?

“பணவீக்கம் என்னுடைய தலையான கவலை அல்ல என்று சில நாட்களுக்கு முன் நிதி  அமைச்சர் அறிவித்தார். அவர் சொன்ன முகூர்த்தமோ என்னவோ, சில்லரைப் பணவீக்கம்  7 சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது! உணவுப் பொருள்களின் பணவீக்கம் 7.62 சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது! இப்பொழுது கூட நிதி அமைச்சர் பணவீக்கத்தைப் பற்றிக் கவலைப்படவில்லை என்றால் அவர் சாமானிய மக்களிடமிருந்து மிக விலகி நிற்கிறார் என்ற எண்ணம் உறுதிப்படுகிறது” என்று ஒன்றிய முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

குதுப்மினார் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு!

தில்லியில் உள்ள புராதான சின்னமான குதுப்மினார், 27 இந்து தெய்வங்கள் மற்றும் ஜெயின் கோவில்களை இடித்து கட்டப்பட்டதாக குன்வர் மகேந்திரத்வாஜ் பிரதாப் சிங் என்பவர் வழக்கு தொடர்ந்தார். குதுப்மினார் வளாகத்தில் இந்துக்கள் வழிபாடு நடத்த உரிமை வழங்க வேண்டும் என்று கோரினார். மேலும், ஆக்ராவின் ஐக்கிய மாகாணங்களின் வாரிசு தாம்தான் என்பதால் குதுப்மினார் வளாகத்தை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். தலைநகர் தில்லியில் உள்ள சாகேத் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், செப்டம்பர் 17-ஆம் தேதி இதன்மீது விசாரணை நடத்தப்படும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.

பாஜகவின் பேச்சைக் கேட்கக் கூடாது!

“குஜராத் போலீசாருக்கு எனது வேண்டுகோள். தர ஊதியம் போன்ற பல விஷயங்களிலும் நான் உங்களுக்கு ஆதரவளித்துள்ளேன். குஜராத்தில் ஆட்சி அமைத்த பிறகு அதை அமல்படுத்துவோம். நாங்கள் உங்களுடன் இருக்கிறோம். இன்னும் இரண்டு மாதங்களே உள்ளன.  பாஜகவில் இருப்பவர்கள் தவறான செயல்களைச் செய்யச் சொன்னால், மறுத்துவிடுங்கள். பாஜக வெளியேறிவிடும். ஆம் ஆத்மி ஆட்சி அமையும்” என தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரி வால் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

மீண்டும் அட்டர்னி ஜெனரலாகும் முகுல் ரோத்கி

நாட்டின் 15-வது அட்டர்னி ஜெனரலாக 2017-ஆம் ஆண்டு ஜூலை 1-ல் மூத்த வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால் பொறுப்பேற்றார். அவரது 3 ஆண்டுகால பதவிக் காலம் 2020-ஆம் ஆண்டு முடிவடைந்தது. அப்போது 91 வயதாவதால் தம்மை பணியில் இருந்து விடுவிக்க  வேண்டும் என்று கே.கே. வேணுகோபால் கேட்டுக் கொண்டார். ஆனால் ஒன்றிய அரசு அவருக்கு  பணி நீட்டிப்பு வழங்கியது. அப்போது, 2022-ஆம் ஆண்டு வரைதான் தாம் பணியில் இருப்பேன்  என கே.கே. வேணுகோபால் நிபந்தனை விதித்து பணி நீட்டிப்பை ஒப்புக் கொண்டார். அந்த வகை யில், கே.கே. வேணுகோபாலின் பணிக் காலம் செப்டம்பர் 30-ஆம் தேதியுடன் நிறைவடையும் நிலையில், அட்டர்னி ஜெனரலாக மீண்டும் முகுல் ரோத்கி நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முகுல் ரோத்கி  ஏற்கெனவே 2014-2017 வரை ஒன்றிய அரசின் அட்டர்னி ஜெனராக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாஜகவில் இணைந்த நிதிஷ் கட்சி கவுன்சிலர்கள்

ஐக்கிய ஜனதா தளத்தின் டையூ - டாமன் பிரிவைச் சேர்ந்த 15 மாவட்ட ஊராட்சி உறுப்பி னர்கள் பாஜகவில் இணைந்துள்ளனர். பீகாரில் பாஜக கூட்டணியிலிருந்து ஐக்கிய ஜனதா தளம் விலகிய நிலையில், அருணாசல பிரதேசத்தில் உள்ள ஐக்கிய ஜனதா தளம் எம்எல்ஏ-க்களும்,  மணிப்பூரைச் சேர்ந்த  ஐக்கிய ஜனதாதளம் எம்எல்ஏ-க்களில் 5 பேரும் பாஜக-வில் இணைந்த னர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிமுக அலுவலக மோதல்: காவல்துறை பதிலளிக்க உத்தரவு

சென்னை, செப்.13- அதிமுக அலுவலக வன்முறை யில் ஈடுபட்ட எடப்பாடி பழனிசாமி ஆதரவு மாவட்டச் செயலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் ஜே.சி டி. பிரபாகர் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனுதாக்கல் செய்தி ருந்தார். அதில், எடப்பாடி பழனிசாமி  ஆதரவு மாவட்ட செயலாளர்களுக்கு எதிராக நாங்கள் அளித்துள்ள புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனு நீதிபதி இளந்திரை யன் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு உள்துறை செயலாளர், காவல் துறை டிஜிபி , ராயப்பேட்டை காவல் ஆய்வாளர் மற்றும் சென்னை சிபிசிஐடி ஆய்வாளர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை செப்டம்பர் 19 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலை. தகுதிச் சான்று விண்ணப்பம் நிறுத்தம்

ம் சென்னை, செப். 13- தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழக துணை வேந்தர் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது: தகுதிச் சான்றிதழுக்கான கட்ட ணங்கள் ஒருமைப்படுத்தப்படுவ தாலும் மாணவர்கள் விண்ணப் பிக்கும் முறைகள் எளிமைப்படுத்தப் படுவதாலும் தொழில்நுட்ப மாற்றங் களைப் பல்கலைக்கழகம் செய்து  வருகிறது. சீராய்வுகளை உடனடி யாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதால் தகுதிச் சான்றிதழுக்கான தொழில்நுட்ப நுழைவுகள் (தகுதிச் சான்றிதழ் விண்ணப்ப போர்டல்) தற்காலிகமாக மூடப்படுகிறது. தகுதிச் சான்றிதழ் தேவைப் படும் மாணவர்கள், சில நாட்கள்  பொறுத்திருந்து, பின்னர் விண்ணப் பிக்கும் படி கேட்டுக் கொள்ளப்படு கிறார்கள். செப்டம்பர் 15ஆம் தேதிக்குப் பின்னர் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும். எனவே, யாரும் அச்சமடைய வேண்டாம் அனைத்து விண்ணப்பங்களும் பரிசீலிக்கப்படும். இந்த நிறுத்தம் தற்காலிகமானது மட்டுமே. இவ்வாறு அதில் கூறப்பட்டுள் ளது.

பாலியல் தொல்லை:   உதவி பேராசிரியர்  மீது நடவடிக்கை

தருமபுரி,செப்.13- தருமபுரி அரசு மருத் துவக் கல்லூரி மருத்துவ மனையில் சட்டம் சார்ந்த துறையில் பணியாற்றி வரு பவர் சதீஷ்குமார். இவர்  அதே கல்லூரியில் படிக்கும் இரண்டாம் ஆண்டு  மாணவிகளிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபடுவதாக கல்லூரி முதல்வர் அமுத வள்ளிக்கு புகார் வந்தது. அதன் அடிப்படையில் நடந்த விசாரணையில் சதீஷ்குமார் சட்டம் சார்ந்த  பிரிவில் இருந்து குழந்தை கள் நலப் பிரிவுக்கு மாற்றப் பட்டுள்ளார். இந்நிலையில் பேராசிரியர் சதீஷ்குமார் இளம் பெண் ஒருவருடன் தனிமையில் இருக்கும் வீடியோ சமூக வலை தளத்தில் பரவி வருகிறது.

உலகச் செய்திகள்

  1. கொலம்பியாவில் மேலும் ஒரு தொழிற்சங்கத் தலைவர் கொலை செய்யப்பட்டுள்ளார். அந்நாட்டின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள நிறுவனமொன்றில் பாதுகாப்பு ஊழியராக பணியாற்றி வந்த சிபாரெஸ் லாம்ப்ரியா வர்காஸ், இரு அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். கடுமையான காயங்களுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர், அங்கு சென்ற சில நிமிடங்களிலேயே உயிரிழந்தார். இந்தக் கொலைக்கு கொலம்பிய தொழிற்சங்கங்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
  2. ஆர்மீனியா  அஜெர்பைஜான் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையில் மீண்டும் மோதல் வெடித்துள்ளது. இரு நாடுகளின் எல்லைப்பகுதியில் மூண்ட கடுமையான சண்டையில் அஜெர்பைஜானைச் சேர்ந்த படை வீரர்கள் பலர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். 2020 ஆம் ஆண்டில் போர் நின்று விட்டாலும், எல்லையில் அடிக்கடி மோதல்கள் நடந்து கொண்டுதான் இருந்தன. தற்போது மீண்டும் வெடித்துள்ளது. இந்த மோதலுக்கு இரு நாடுகளும் ஒன்றையொன்று குற்றம் சாட்டியுள்ளன. 
  3. ராணுவ நடவடிக்கைகள் மூலமாக ஏமனில் தீர்வு காண முடியாது என்று ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் கூறியுள்ளது. சவூதி அரேபியாவின் தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தியுள்ளது. தற்போது போர் நிறுத்தம் செய்யப்பட்டிருக்கிறது. இது நீட்டிக்கப்படுவதோடு, மேலும் விரிவாக்கம் செய்யப்பட வேண்டும் என்று பாதுகாப்பு கவுன்சில் வலியுறுத்தியுள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “அனைவரையும் உள்ளடக்கிய உடன்பாடு ஏற்பட இது வாய்ப்பாக இருக்கும்” என்று சொல்லப்பட்டிருக்கிறது.
 

;