states

நரிக்குளத்தில் சிதைந்த மோடி படமும் அரசியலாக்கத் துடிக்கும் பாஜகவும்

நாகர்கோவில், செப்.15- நரிக்குளம் கல்வெட்டில் பொறிக்கப் பட்ட மோடி படம் முன் எப்போதோ சிதைந்த நிலையில் அந்த வழியாக ராகுல் காந்தி நடத்திய இந்திய ஒற்று மை நடைபயணத்துடன் இணைத்து பாஜகவினர் நடத்தும் அரசியல் நாட கத்துக்கு ஒன்றிய அமைச்சர் வி.கே. சிங் முட்டுக்கொடுக்கமுனைந்துள்ளார். இரண்டு நாள் சுற்றுப்பயணமாக கன்னியாகுமரி வந்த ஒன்றிய அமைச்சர் வி.கே.சிங் வியாழனன்று (செப்.15) செய்தியாளர்களுக்கு அளித்த  பேட்டியின்போது,  கடந்த 2019 ஆம் ஆண்டு கன்னியாகுமரி அருகே நரிகுளத்தில் உள்ள பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார் எனவும், இந்த  பாலத்திற்காக நாட்டப்பட்ட கல்வெட்டில் இருந்த பிரதமர் மோடி யின் படத்தை காங்கிரஸ் நிர்வாகிகள் சேதப்படுத்தி உள்ளனர் எனவும் தெரி வித்துள்ளார். காங்கிரசார் குறுகிய கண்ணோட்டத்துடன் அவரது படத்தை சேதப்படுத்தி உள்ளனர்.  ராகுல் காந்தியின் யாத்திரையில் அரசியலையும் மதத்தையும் இணைத்து உள்ளனர். இதே குற்றச்சாட்டை ராகுல்காந்தியின் ஒற்றுமை பயணம் கடந்து சென்ற மறுநாள் முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும் கூறியிருந்தார்.

இது குமரி மாவட்டத்தில் கல வரத்தை தூண்டும் காங்கிரசின் முயற்சி எனவும் குறிப்பிட்டிருந்தார். இந்த குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்பதை அப்பகுதி மக்கள் தெளிவுபடுத்தி உள்ளனர். ஆனாலும், கல்வெட்டு சிதைப்பு- அரசியல்-மதம் என பின்னிப்பிணைத்து பதற்றத்தை பற்றவைக்க பாஜகவினர் முயற்சித்து வருகிறார்கள். குமரி மாவட்டத்தில் நடந்த நாடாளுமன்ற, சட்டமன்ற, உள்ளாட்சி தேர்தல்களில் அடிமேல் அடிவாங்கி சோர்ந்து கிடக்கும் பாஜக வினரை எப்படியாவது  தூண்டிவிட்டு ஒரு கலவரை சூழலை உருவாக்க முயன்று வருகிறார்கள். அதற்கு  ஒன்றிய அமைச்சரே துணை போயி ருப்பது அதிர்ச்சி அளிப்பதாக சாதா ரண பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

;