states

தமிழகத்தில் சிறுபான்மையினரை தாக்கும் இந்துத்துவா சக்திகள்

சென்னை, மே 26-  தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் மீது தாக்கு தல் நடத்தும் இந்துத்துவா சக்திகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் தமிழக உள்துறைச் செயலாள ருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.   உள்துறைச் செயலாளருக்கு அனுப்பி யுள்ள கடிதம் குறித்து சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் மாநிலத் தலைவர் எஸ்.நூர் முகமது, மாநிலப்பொதுச் செயலாளர் எம்.ராம கிருஷ்ணன் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:  தமிழ்நாடு எப்போதும் அமைதிப் பூங்காவாகவே விளங்கி வருகிறது. சில தீய சக்திகள் அமைதிக்கு பங்கம் விளைவிக்கிற போது அதன் மீது உரிய நடவடிக்கை எடுத்து அமைதியை நிலை நாட்டுவதில் முன்னுரிமை மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. சமீப காலமாக அங்கொன்றும் இங்கொன்றுமாக சிறுபான்மையினர் மக்கள் மீது, நிறுவனங்கள் மீது திட்டமிட்ட தாக்குதல்களை, வன்முறை களை இந்துத்துவா சக்திகள் முன்னெடுத்து வருகின்றனர். இந்த சக்திகள் மீது உரிய நடவடிக்கை எடுத்திட முன்வர வேண்டும் என தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்

1- நாகப்பட்டினம் மாவட்டம் திருப்பூண்டி அரசு மருத்துவமனையில் அவசர மருத்துவ  சிகிச்சை செய்து கொண்டிருந்த சிறுபான்மை யினர் பெண் மருத்துவரை அவமானப் படுத்தி, பணி செய்ய விடாமல் தடுத்தும், ஹிஜாபை அகற்ற வேண்டும் என அராஜ கத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் மீது புகார் அளிக்கப்பட்டும் காவல்துறை நடவடிக்கை எடுக்க மறுத்து வருகிறது.

2- விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தாலுகா செம்பட்டி கிராமத்தில் தங்களது சொந்த இடத்தில் பிரார்த்தனை நடத்திக் கொண்டிருந்த கிறிஸ்தவர்கள் மீது வேறு ஊரைச் சேர்ந்த பாஜக பிரமுகர் தலையீடு செய்து வன்மத்தோடு நடந்து கொண்டதோடு, கிறிஸ்தவ போதகர் பாஸ்டர் ஜோஸ்வாவை அவர் பிரார்த்தனை முடித்து வீட்டிற்கு செல்கிறபோது வழிமறித்து தாக்கு தல் நடத்தியுள்ளனர். தாக்குதலில் படுகாய மடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்ட பாஸ்டர் ஜோஸ்வாவிடம் வாக்குமூலம் பெற்ற காவல் துறை, பாஜகவினர் மீது நட வடிக்கை எடுப்பதற்கு பதிலாக, சபைக்குள்  புகுந்து அராஜகம் புரிந்த பாஜகவினரிட மிருந்து மனுவை பெற்று, சிகிச்சை பெற்று வரும் பாஸ்டர் ஜோஸ்வா மீது வழக்குப் பதிவு செய்து காவல்துறை நெருக்கடி கொடுத்து வருகிறது.

பள்ளிக்கு இடையூறு செய்யும்  இந்து முன்னணியினர்

3- மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் கிராமத்தில் சிறுபான்மை பிரிவைச் சார்ந்த மக்களை ஊரிலிருந்து விலக்கி வைத்து கொடுமைகள் செய்து வருகின்றனர். சக மனிதர்களின் சுமூக வாழ்க்கையை உறுதி செய்ய வேண்டிய மாவட்ட நிர்வாகமும், உள்ளூர் காவல்துறையும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக செயல்படுவதற்கு பதிலாக, அடக்குமுறையாளர்களின் கைப்பாவையாக செயல்பட்டு வருகின்றன.

 4- தென்காசி மாவட்டம் வி.கே.புதூர் தாலுகா கீழப்பாவூர் ஒன்றியம் அச்சம் குன்றம் கிராமத்தில் சொந்த இடத்தில் தேவாலயம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணியைச் சேர்ந்தவர்கள் பிரச்சனை செய்வதும், அங்கு செயல்படக்கூடிய அரசு உதவி பெறும் பள்ளிக்கு இடையூறாக செயல்படுவதும் நடைபெற்று வருகிறது. அரசு நிர்வாகமும், கல்வித் துறையும், காவல்துறையும் இந்த அராஜகங்களை தட்டிக் கேட்க மறுப்பதோடு இந்த அராஜக வாதிகளுக்கு துணை போய் வருகின்றனர். மேற்கண்ட நான்கு நிகழ்வுகள் சமீப நாட்களில் நடைபெற்ற உதாரணங்களாகும். இதுபோல் வெளியே தெரிவிக்க அச்சமுறும் அளவுக்கு  பல இடங்களில் பாஜக, இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ்.அமைப்புகளைச்  சார்ந்தவர்கள் சிறுபான்மை மக்கள் மீதும், நிறுவனங்கள் மீதும் தாக்குதல்களை நடத்திக் கொண்டு வருகிறார்கள். மேற்கண்ட நிகழ்வுகளில் பாதிக்கப்படு பவர்களுக்கு ஆதரவாக அரசு துணை நிற்க வேண்டுமென கேட்டுக் கொள்வதோடு, இந்த அராஜக செயல்களை புரிபவர்கள் மீது கடுமை யான சட்டப் பிரிவுகளின் கீழ் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.   தமிழகம் அமைதியை, மக்கள் ஒற்றுமை யை, மத நல்லிணக்கத்தை, மனிதநேயத்தை பேணுவதில் முன்னணி மாநிலம் என்ற நிலை யை உயர்த்திப் பிடிக்க தாங்கள் தலையீடு செய்து இது போன்ற செயல்களுக்கு உரிய நடவடிக்கை எடுத்து மக்கள் மத்தியில் நல்லிணக்கத்தையும், அமைதியான வாழ்வையும் உத்தரவாதம் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.

 

;