தருமபுரி, ஆக.16- காவிரி உபரிநீர் பாசனத் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி, ‘நமது காவிரி, நமது உரிமை’ நடைபய ணத்தை தருமபுரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி துவங்கி உள்ளது. கர்நாடகா மாநில அரசு, மேகதாது வில் அணை கட்டுவதற்கு முயற்சித்து வருகிறது. இந்த அணை கட்டப்பட்டால் டெல்டா மாவட்டங்களும் தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களும் குடி நீருக்கும், பாசனத்திற்கும் பெரும் தட்டுப்பாடு ஏற்படும். எனவே, அணை கட்டும் முயற்சியை ஒன்றிய அரசு தடுத்து நிறுத்தவேண்டும்; தருமபுரி மாவட்ட நீர் நிலைகளை மேம்படுத்த வேண்டும்; காவிரி உபரிநீர் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். ஒகே னக்கல்குடிநீர் 2ஆவது திட்டத்திற் கான கட்டுமான பணிகளை துவக்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆகஸ்ட் 16 அன்று நடைபயணம் ஒகேனக்கல்லில் துவங்கி ஆகஸ்ட் 18 அன்று தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலம் முன்பு நிறைவடைகிறது. ஒகேனக்கல்லில் துவங்கிய நடைபயணத்திற்கு மாவட்டச் செய லாளர் ஏ.குமார் தலைமை வகித்தார். சிபிஎம் கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை நடை பயணத்தை துவக்கிவைத்தார். முன்னதாக, நடைபயணத்திற்கு மடம் கிராமத்தில் உள்ள சிபிஎம் தலை வர் எம்.ஆறுமுகம் அவர்களின் நினை விடத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நடைபயணத்தில், கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.சிசு பாலன், மூத்த தலைவர் பி.இளம்பரிதி, மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் எம்.மாரிமுத்து, எம்.முத்து, சோ.அருச்சுணன், எஸ்.கிரைஸா மேரி, வே.விசுவநாதன், ஆர்.சின்ன சாமி, ரவி, ஆர்.மல்லிகா உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.