states

கால் நூற்றாண்டு போராட்டம் வெற்றி

மலைக்குறவன் மாணவர்களுக்கு சாதிச் சான்றிதழ் கிடைத்தது சேலம், செப்.13- சேலம் மாவட்டம், ஆத் தூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் சுமார்  ஆயிரத்திற்கும் மேற்பட்ட  பழங்குடியின மலைவாழ் மக்கள் வசித்து வருகின்ற னர். இப்பகுதி மக்களின் குழந்தைகள் பள்ளி மற்றும் கல்லூரிகளில் சேர சாதிச் சான்றிதழ் கேட்டு கடந்த 25  வருடங்களாக ஆட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளி டம் மனு அளித்து வந்தனர். ஆனால், அரசு அதிகாரிகள் காலம் தாழ்த்தி வந்தனர். இதனால் ஆவேசமடைந்த மலைவாழ் மக்கள் தனது குழந்தைகளுடன், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் தலைமையில் பெத்தநாயக்கன்பாளையம் வட்டாட்சியர் அலு வலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதன் விளைவாக கோட்டா ட்சியர் ரமேஷ் விசாரணை செய்து, 38 மாணவர்களுக்கு சாதிச்சான்றிதழ்களை வழங் கினார். இதனையடுத்து தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலத் தலைவரும், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினருமான பி.டில்லிபாபு தலைமையில் பள்ளி மாணவர்கள் உள்ளி ட்டோர் புதனன்று வருவாய் கோட்டாட்சியரை நேரில்  சந்தித்து நன்றி தெரிவித்த னர்.