சென்னை,அக்.9- தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மார்ச் 20 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 21 வரைக்கும் நடந்தது. பிறகு, கூடும் தேதி குறிப்பிடப்படா மல் ஒத்திவைக்கப்பட்டது. சட்டப்பேரவையை 6 மாத கால இடைவெளிக்குள் கூட்ட வேண்டும். அதன்படி, அக்.9 அன்று காலை 10 மணிக்கு சென்னை தலைமை செயல கத்தில் உள்ள சட்டப்பேரவை கூடத்தில் கூட்டம் தொடங்கியதும் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் லியாவுதீன் சேட் (அரவக்குறிச்சி), கே. பழனி யம்மாள் (ராசிபுரம்), வெ.அ. ஆண்டமுத்து (பவானிசாகர்) ஆகி யோர் மறைவுக்கு இரங்கல் தெரி வித்து தீர்மானம் கொண்டு வரப் பட்டது. அதனைத் தொடர்ந்து, பஞ்சாப் மாநில முன்னாள் முதல மைச்சர் பிரகாஷ் சிங் பாதல், தமிழ்நாடு அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் சபாநாய கம், கேரள மாநில முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி, வேளாண் அறிவியலாளர் எம்.எஸ். சுவாமிநாதன் ஆகியோரது மறைவுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.