states

img

எல்ஐசி புதிய திட்டம் ‘தன் வர்ஷா’: காப்பீடு, சேமிப்பு என இரு பலன்

சென்னை, அக்.18-  இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி  தன்  வர்ஷா  என்ற  திட்டத்தினை அறிமுகம் செய்துள்ளது.   இது ஒரு குளோஸ் எண்டட் திட்டமாகும். எல்ஐசியின்  தன் வர்ஷா என்பது பங்கு சந்தை அபாயம் இல்லாத ஒரு திட்டமாகும். ஒற்றை பிரீமியம் உள்ள ஒரு லைஃப் இன்சூரன்ஸ் திட்டமாகும்.  இது பாதுகாப்பு மற்றும் சேமிப்பு என இரு அம்சங் களையும் சேர்த்து வழங்குகின்றது. ஒரு வேளை பாலிசி எடுத்தவர் பாலிசி காலத்தில் துரதிருஷ்டவசமாக இறந்து விட்டால், இந்த பாலிசி மூலம் நிதி உதவி கிடைக்கும். இது  உங்கள் குடும்பத்தில் நீங்கள் இல்லாவிட்டாலும், பொரு ளாதார ரீதியாக பெரும் ஆறுதலாகவும் அமையும். இந்த திட்டத்தில் தேர்ந்தெடுக்கும் திட்டத்தின் அடிப்படை யில் வருமான வரி விலக்கு உள்ளது. எல்ஐசி விடுத்துள்ள  செய்திக்குறிப்பின் படி இந்த பாலிசியின் முதிர்வு காலத் திலும் ஒரு கணிசமான தொகை கையில் கிடைக்கும். ஆக இது பாலிசிதாரர்களுக்கு பாதுகாப்பினையும் கொடுக்கிறது. அதேசமயம் முதிர்காலத்தில் சேமிப்பாக வும் பார்க்கப்படுகிறது. எப்போது எடுக்கலாம்? 

இந்த திட்டத்தில்  அக்டோபர் 17, 2022 முதல் மார்ச் 31, 2023 வரையில் மட்டுமே சேரமுடியும்.  இந்த பாலிசி யின் குறைந்தபட்ச காப்பீடு தொகை ரூ.1, 25, 000 அதிக பட்ச வரம்பு கிடையாது. பாலிசி காலம் 10 - 15 ஆண்டு களாகும்.  குறைந்தபட்ச நுழைவு வயது - 3 ஆண்டுகள் (முடிவு).  பாலிசி காலம் 15 ஆண்டுகள்,  8 ஆண்டுகள் (முடிவு) - பாலிசி காலம் 10 ஆண்டுகள். அதிகபட்ச நுழைவு வயது - விருப்பம் 1 : 60 வயது - விருப்பம்  2 : 40 வயது - பாலிசி காலம் 10 ஆண்டுகள், விருப்பம் 2: 35 வயது. பாலிசி காலம் 15 ஆண்டுகள்.

பிரீமியம் செலுத்தும் காலம்

 பிரீமியம் செலுத்தும் காலம் 10 ஆண்டு அல்லது 15 ஆண்டுகள் என இரு வகையாக உள்ளது. இந்த பாலிசி மீது கடன் வசதியும் உண்டு. சரண்டர் வசதியும் உண்டு.  இந்த திட்டம் மருத்துவம் மற்றும் மருத்துவம் அல்லாதவர்களுக்கும் கிடைக்கும். இது மருத்துவம் அல்லாத வரம்பு, வயது, தேர்ந்தெடுக்கப்பட்ட இன்சூரன்ஸ் தொகையின் அடிப்படையில் கிடைக்கும்.

முதிர்வு பலன் 

உறுதியளிக்கப்பட்ட ஒரு காப்பீடு தொகை மற்றும் திரட்டப்பட்ட உத்தரவாத தொகை மூலம் முதிர்வு காலத்தில் ஒரு கணிசமான  தொகை கிடைக்கும்.  ஒரு வேளை இறப்பு ஏற்பட்டாலும், பாலிசிதாரர் இறந்த ஆண்டிற்கான உத்தரவாத தொகை வழங்கப்படும். இது தவிர இறப்பு பலனும் உண்டு. மும்பையில் திங்களன்று இந்த புதிய பாலிசியை எல்ஐசி தலைவர் எம்.ஆர்.குமார் அறிமுகப்படுத்தினார். அப்போது எல்ஐசி முத்த அதிகாரிகள் உடனிருந்தனர்.

 

 

;