states

தீக்கதிர் விரைவு செய்திகள்

மகாராஷ்டிராவில் நிலச்சரிவு :   பலி 10ஆக உயர்வு

மும்பை, ஜூலை 20- மகாராஷ்டிராமாநிலம் ராய்காட் மாவட்டத்திற்கு உட்பட்ட இர்சல்வாடியில் கனமழை காரணமாக புதனன்று இரவு நிலச்ச ரிவு ஏற்பட்டது. இந்த நிலச்ச ரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 10ஆக உயர்ந்த நிலையில், தேசிய  மற்றும் மாநில மீட்பு படை யினர் தீவிரமாக மீட்பு பணி யில் ஈடுபட்டு வருகின்றனர். 

சென்னையில் 1000 பேர்  அமரக்கூடிய அரங்கம்

சென்னை, ஜூலை 20- சென்னை குரோம்பேட்டையில் எம்.ஐ.டி. வளாகத்தில் 1000 பேர் அமரும்  வகையில் குளிர்சாதன வசதிகளுடன் மிகப்பெரிய அரங்கம் அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை குரோம்பேட்டையில் எம்ஐடி எனப்படும் மெட்ராஸ் இன்ஸ்டி டியூட் ஆஃப் டெக்னாலஜியின் மெட்ராஸ்  தொழில்நுட்ப கல்லூரி பவளவிழாவை வியாழனன்று (ஜூலை 20) முதலமைச் சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். அப்போது உரையாற்றிய அவர், “இந்தியாவின் புகழ் பெற்ற கல்வி நிறுவனங்களின் பட்டியலில் தமிழ்நாடு பல கல்வி நிறுவனங்கள் உள்ளன. அதில்  எம் ஐ டி கல்வி நிறுவனம் இடம் பெற்றுள்ளது”என்றார். குரோம்பேட்டை எம்.ஐ.டியில் அதி நவீன உள்விளையாட்டு அரங்கத்துடன் இணைந்த கலையரங்கம் கட்ட ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் கற்றல் வளாகம், பவள விழா  பூங்கா அமைக்க ரூ.25 கோடி வழங்கப்ப டும் என்று முதலமைச்சர் தெரிவித்தார்.

 கொலை முயற்சி:  கணவருக்கு  7 ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி,ஜூலை 20- கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்க லம் அருகே உள்ள இருதாளம் கிரா மத்தை சேர்ந்தவர் முனி சந்திரன் (35).  கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி ரேகா. இவர்களுக்கு கடந்த 26.7.2021 அன்று குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது.  அப்போது மனைவியை முனி சந்திரன் அடித்துள்ளார். அப்போது ரேகாவின் உறவினர்களான வெங்க டேஷ் (45), மாதேஷ் (31) ஆகிய இரு வரும் முனி சந்திரனை தடுத்துள்ளனர். இதில் ஆத்திரமடைந்த முனி சந்திரன் இருவரையும் கத்தியால் குத்தி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதில்  படுகாயமடைந்த 2 பேரும் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று கெலமங்க லம் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இதையடுத்து, கொலை முயற்சி மற்றும் கொலை மிரட்டல் வழக்கு பதிவு  செய்து காவல்துறையினர் விசாரணை  நடத்தி வந்தார். இந்த வழக்கு தேன்கனிக் கோட்டை சார்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கலை வாணி, “கொலை முயற்சி மற்றும் கொலை மிரட்டல் குற்றத்திற்கான முனி  சந்திரனுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை யும், ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தார். மேலும் அபராதம் கட்ட தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனை அனுப விக்க உத்தரவிட்ட நீதிபதி தீர்ப்பு கூறினார். இதையடுத்து முனி சந்திரனை கைது செய்த காவல்துறையினர் வேலூர்  சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில்  அரசு தரப்பில் அரசு கூடுதல் வழக்கறி ஞர் ரவீந்திரநாத் ஆஜரானார்.

அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்யா சொத்து குவிப்பு வழக்கு: 8  வாரத்தில் முடிக்க உத்தரவு

சென்னை, ஜூலை, 20- அதிமுக முன்னாள் எம்எல்ஏ தி.நகர் சத்யா தேர்தல் வேட்பு மனுவில் சொத்து மதிப்பை குறைத்துக் காட்டியதாக அளித்த புகாரில் நடவடிக்கை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த சொத்து குவிப்பு வழக்கை வியாழனன்று விசா ரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு,”புகாரில் முகாந்திரம் இருந்தால் வழக்குப் பதிவு  செய்யவும், 8 வாரத்தில் விசாரணையை முடிக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தர விட்டுள்ளது”.

25 வட்டாரங்களில் மிதமான வறட்சி: அரசு அறிவிப்பு

சென்னை, ஜூலை 20- கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் குறைந்த  மழைப்பொழிவு 33 விழுக்காட் டிற்கு மேலாக பயிர் சேதம் ஏற்பட்ட 25 வட்டாரங்களை “மித மான வேளாண் வறட்சி” கொண்ட வையாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் 1.10.2022 முதல் 31.12.2022 வரையிலான வடகிழக்கு பருவ மழைக் காலத்தில் குறைவான மழைப்பொழிவு ஏற்பட்டதன் காரணமாக பயிர்கள் வாடியதை தொடர்ந்து, 33 விழுக்காடு மற்றும்  அதற்கு மேல் பயிர்கள் பாதிப்புக்கு  உள்ளானதால் 25 வட்டாரங்கள் “மிதமான வேளாண் வறட்சியால்” பாதிப்புக்கு உள்ளானது என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அதன்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆவுடையார் கோவில், மணமேல்குடி, சிவகங்கை மாவட்டத்தில் தேவ கோட்டை, இளையான்குடி, காளை யார்கோவில், மானாமதுரை, ராமநாதபுரம் மாவட்டத்தில் போக லூர், கடலாடி, கமுதி, மண்டபம், முதுகுளத்தூர், நயினார்கோவில், பரமக்குடி, ஆர்.எஸ்.மங்கலம், ராமநாதபுரம், திருப்புல்லாணி, திருவாடானை. தென்காசி மாவட்டத்தில் ஆலங்குளம், கடையநல்லூர், கீழப்பாவூர், மேலநீலிதநல்லூர், சங்கரன்கோவில், தூத்துக்குடி மாவட்டத்தில் ஆழ்வார்திருநகரி, விருதுநகர் மாவட்டத்தில் நரிக்குடி, திருச்சுழி ஆகிய 25 வட்டாரங்கள் பாதிப்புக்கு உள்ளானது என அரசு அறிவித்துள்ளது. மேலும், இது தொடர்பாக தேவையான நடவடிக்கையை எடுக்குமாறு வருவாய் நிர்வாக  ஆணையர் மற்றும் மாநில நிவா ரண ஆணையர் ஆகியோருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

உலகச் செய்திகள்

“தைவான் சீனாவின் பிரிக்க முடியாத பகுதி என்பதை மீண்டும் அமெரிக்காவுக்கு நினைவுபடுத்த விரும்புகிறோம்”  என்று அமெரிக்காவுக்கான சீனத்தூதர் ஜி ஃபெங் சுட்டிக்காட்டி யுள்ளார். தைவானின் துணை ஜனாதிபதி லாய் சாங்-டி அமெரிக்காவுக்கு செல்லவிருப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தே இவ்வாறு அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

ஐரோப்பாவின் பல நாடுகளில் பெரும் அளவு வெப்பம் பதிவாகி யுள்ளது. அல்பேனியா, பிரான்ஸ், ஜெர்மனி, கிரீஸ், ஹங்கேரி,  இத்தாலி, போலந்து, போர்ச்சுகல், ருமேனியா,  ஸ்பெயின் மற்றும் ஸ்விட்சர்லாந்து ஆகிய  நாடுகளில் கடுமையான வெப்பம் நிலவுகிறது.  இந்த நாடுகளில் வெளியில் நடமாடுவது குறித்த எச்சரிக்கைகள் அந்தந்த நாடுகளின் அரசாங்கங்களால் வெளியிடப்பட்டிருக்கிறது.

இஸ்ரேல் ராணுவம் நடத்திய புதிய தாக்குதலின்போது 19 வயதான பாலஸ்தீனியர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். மேலும் 35 பேர் காயமடைந்துள்ளார்கள். மேற்குக்கரைப் பகுதியில் உள்ள நேப்ளசில் இந்தத் தாக்குதல் நடந்தபோது பொதுமக்கள் தடுத்து எதிர்த்தாக்குதல் நடத்தினார்கள். நடப்பாண்டில் இதுவரையில் பாலஸ்தீனத்தைச் சேர்ந்த 175 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

;