states

தனி யூனியன் பிரதேசம் கோரும் குக்கி பழங்குடியின மக்கள்!

புதுதில்லி, செப்.30- மணிப்பூரில் கொடூரமான தாக்குத லுக்கு தாங்கள் உள்ளாகியருக்கும் நிலையில் தங்களின் அமைதியான வாழ்க்கைக்கு, தாங்கள் அதிகம் வாழும் சூரசந்த்பூர், காங்போபி, சந்  தால், தெங்னோபால் மற்றும் பெர்சால்  ஆகிய 5 மாவட்டங்களை தனி நிர்வா கத்தின்கீழ் (யூனியன்) பிரித்திட வேண் டும் என்று கோரிக்கை விடுத்து வரு கின்றனர். இதனடிப்படையில், தலைநகர் தில்லியில், ஜூலை 16, ஆகஸ்ட் 17,  ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய  தேதிகளில், இதுவரை நான்கு சுற்றுப்  பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள் ளன. அரசுத்தரப்பில் உள்துறை அமைச்  சகத்தின் வடகிழக்கு ஆலோசகர் ஏ.கே. மிஸ்ரா, குக்கி தேசிய ஸ்தா பனம் மற்றும் ஐக்கிய மக்கள் முன்னணி  சார்பில் தலைவர்களும் பங்கேற்றனர்.  இது தொடர்பான கோப்புகள், உள் துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு அனுப் பப்பட்டு இருப்பதாகத் தெரிகிறது.